இ-சார்ஜிங் ஸ்டேஷன் வருகிறது.. இனிமே வண்டி நிக்காது.. வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தமிழ்நாட்டுக்கே ஹேப்பி
சென்னை: வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி செய்தி வரப்போகிறது.. இதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இ-மின்சார வாகனங்களின் எண்ணிக்கைகள், தொடர்ந்து அதிகரித்தபடியே வருகிறது.. இதற்கான தேவைகளும், வரவேற்பும் வாகன ஓட்டிகளிடம் அதிகரித்து கொண்டே உள்ளது.. இந்தியாவை பொறுத்தவரை, மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை பெற்று வருகிறது. இதற்காக, பல்வேறு நிறுவனங்கள் இ வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வமும் காட்டி வருகின்றன..

தமிழ்நாடு: நம்முடைய தமிழகத்தில்கூட, வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக, ஹைவேஸ்களில், 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
அதாவது, வாகனங்களை நிறுத்தி, சார்ஜ் செய்யும்விதமாக இந்த பாய்ண்ட் அமைக்கப்படுகிறதாம். அந்தவகையில், தேசிய நெடுஞ்சாலைகளில் தலா 25 கிமீ தூரத்துக்கு ஒரு சார்ஜிங் மையம் அமைக்க முடிவு தமிழக மின்வாரியமும் திட்டமிட்டதாகவும், இதற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் மையங்களை அமைக்க 100 இடங்களை கண்டறிந்து, அதற்கான டெண்டர் விடப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
மெட்ரோ ரயில் நிலையம்: சென்னையில், மெட்ரோ ரயில் நிலையம், சில வணிக வளாகங்கள், பெட்ரோல் பங்க்குள் போன்றவற்றில் பொது சார்ஜிங் மையங்கள் உள்ளதைபோலவே, பிற மாவட்டங்களிலும், சில இடங்களில் சார்ஜிங் மையங்கள் உள்ளன. ஆனால், அவையெல்லாம் எங்கிருக்கின்றன என்ற சரியான விபரம், நிறைய பேருக்கு தெரிவதில்லை.
அதனால்தான், சார்ஜிங் மையம் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள, தனி வெப்சைட், மொபைல் செயலி என இரண்டையுமே கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.. சார்ஜிங் மையங்கள் எந்தெந்த இடத்தில் உள்ளன? எவ்வளவு கி.மீ. தூரத்தில் உள்ளன? என்பது உள்ளிட்ட விபரங்களை இந்த மொபைல் ஆப்பில் எளிதாக தெரிந்து கொள்ள முடியுமாம்.
இணையதளம்: இந்த இணையதளம், மொபைல் போன் செயலியில் அறியும் வசதியை, தமிழக அரசு அடுத்த மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாம். இதுகுறித்த தகவல்தான் தற்போது வெளியாகியிருக்கிறது. டீலர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் ஒரே தளத்தில் தெரிந்து கொள்ள வசதியாக, மின்சார வாகன வெப்சைட், மொபைல் போன் ஆப்-ஐ, தமிழக அரசு அடுத்த மாதம் அறிமுகம் செய்ய போகிறதாம்..
மின்சார வாகனங்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆனாலும், சார்ஜிங்' மையம் இருக்குமா? என்ற அச்சம் காரணமாக, வெளியூர்களுக்கு ஓட்டி செல்ல வாகன ஓட்டிகள் தயங்குகிறார்கள்.. அதனால்தான், மின்சார வாகனத்திற்கென தனி மொபைல் செயலி, இணையதளம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மகிழ்ச்சி: அதில், வீட்டில் இருந்து எங்கு செல்கிறார்களோ, அந்த இடங்களில் உள்ள சார்ஜிங் மையங்கள், மின்சார வாகனத்தின் பயன் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ள முடியுமாம்..!!
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications