Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வியர்க்கும் "வேலூர்".. சுட்டெரிக்கும் சூரியன்.. கொதிக்கும் தமிழக சாலைகள்.. இதுக்கு நடுவில் மழை.. அடடே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 8 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ள நிலையில், மேலும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதியில் கொளுத்த தொடங்கும் வெயில், ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும். கடந்தாண்டுகளில், அதிகபட்சமாக 112 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகி இருந்தது
இந்த ஆண்டு, வெயிலின் தாக்கம் கடந்த பிப்ரவரி மாதமே அதிகரிக்க தொடங்கியது. பிப்ரவரி 15ம் தேதிக்கு பிறகு, வெயில் அளவு படிப்படியாக உயர தொடங்கியது. மார்ச் மாத தொடக்கத்திலேயே 90 டிகிரியை கடந்து சென்றது..

Happy news and rains to continue in tamil nadu till april 2, says meteorological department

தினம் தினம் வெயில் வாட்டத் தொடங்கிவிட்டதால், எதிர்வரும் நாள்களில் வெயில் இன்னும் அதிகமாகும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டே வருகிறது. இதில், தமிழகத்தில் வெயில் அதிகம் பதிவாகும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் முன்னணியில் உள்ளதால், அங்கு தினம் தினம் வெயில் கொளுத்துகிறது... அதேபோல, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை இயல்பு அளவு பெய்யாத நிலையில், அதன் பிறகும் பெரியளவு மழை பெய்யவில்லை. இப்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டிருக்கிறது...

பகல் நேர வெப்ப பதிவும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நெல்லையில் நேற்று முன்தினம், அதிகபட்ச வெப்ப பதிவு 99 டிகிரியாக உயர்ந்தது. மேற்கண்ட 3 தென் மாவட்டங்களிலும் வெயில் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இரவிலும் புழுக்கம் அதிகமாக உணரப்படுகிறது. குறிப்பாக கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் மே மாதம் 25 நாட்கள் தொடர்ந்து கத்திரிவெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அம்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேற்று மாலை கோடை மழை பெய்து அப்பகுதி மக்களை ஆறுதலடையச்செய்தது.

நேற்றைய தினம், தமிழ்நாட்டில் 8 மொத்தம் மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. குறிப்பாக, வேலூர் சேலம், திருச்சி, கரூர், மதுரை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி உள்ளது.. வெயில் காரணமாக குளிர்பானங்கள் விற்பனை ஜோராக நடக்கிறது. வழக்கத்தை விட அதிகளவிலான சாலையோர இளநீர், நுங்கு, பதனீர், கரும்புச்சாறு, நீர் மோர் உள்ளிட்ட தற்காலிக குளிர்பான கடைகள் அதிகளவில் தோன்றி உள்ளன.. வெயில் இவ்வாறாக வாட்டிக் கொண்டிருந்தாலும், ஆங்காங்கே மழையும் பெய்து வருவது மகிழ்ச்சியை தந்து வருகிறது.

தென்மாநில பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு திசை, மேற்குத் திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால், வரும் ஏப்ரல் 2ம் தேதிவரை, அதாவது நாளைவரை தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூறிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதனிடையே, தெலுங்கானாவில் வரலாறு காணாத அளவில் வெயில் பதிவாகி வரும் சூழலில், அங்குள்ள சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்' விடப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இங்குள்ள ஹைதராபாத், செகந்திராபாத் உள்ளிட்ட இடங்களில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாவதால் சமீபத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டது. இந்நிலையில், ஹைதராபாத் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் மேலும் சில தினங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் , தெலுங்கானாவில் நாளை வரை அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.. ஹைதராபாத் நகரில் நாளை மறுநாள் வரை வெப்ப அலை அதிகமாக இருக்கும். குறிப்பாக 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும். கடும் அனல் காற்று வீசும் என்பதால், தெலுங்கானாவின் சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது... அதிகளவில் வெயில் சுட்டெரித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதை குறிக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+