கிருஷ்ணகிரி குஷி.. தர்மபுரி துள்ளுது, சேலம் ஹேப்பி.. இன்று நலத்திட்ட உதவி.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி
சென்னை: தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி என 3 மாவட்டங்களை சேர்ந்த 8,736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார். மேலும், புதிய வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தலுக்கான அரசு விழாவும் இன்று நடைபெறுகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தர்மபுரியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.. இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று காலை சேலம் விமான நிலையத்திற்கு வரும் முதல்வர், அங்கிருந்து கார் மூலம் தர்மபுரி அரசு கலைக்கல்லூரிக்கு 11 மணிக்கு வந்து அரசு விழாவில் பங்கேற்கிறார்.

குறும்படம்: இந்த விழாவில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் குறித்த குறும்படம் திரையிடப்படுகிறது... இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தர்மபுரி, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முடிவுற்ற 993 திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்.
பின்னர், ரூ.560 கோடி மதிப்பீட்டில் 75 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.. இதற்குபிறகு, முதல்வர் ஸ்டாலின் விழா பேருரையாற்றுகிறார்
தொடர்ந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களை சேர்ந்த 8,736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்க உள்ளார்..
நலத்திட்ட உதவிகள்: 560 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண் துறை, பழங்குடியினர் நலத்தறை, கூட்டுறவுத்துறை, சமூகநலத்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளின் சார்பில், தருமபுரிகி கிருஷ்ணகிரி சேலம் என 3 மாவட்டங்களை சேர்ந்த 8736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர்.
இந்த விழாவில் அமைச்சர்கள் கேஎன் நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், சக்கரபாணி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, உள்ளிட்ட அதிகாரிகள், எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
வரவேற்பு: முன்னதாக விமானம் மூலம் சேலம் மாவட்டம் காமலாபுரம் விமான நிலையத்தை அடையும் முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் தருமபுரி அரசு கலைக் கல்லூரிக்கு செல்கிறார். அவரது வருகையையொட்டி கடந்த 8-ம் தேதியிலிருந்தே பல்வேறு ஏற்பாடுகளில் அரசு இயந்திரமும், திமுக-வினரும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார்கள்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் என 3 மாவட்டங்களிலும் முதல்வரின் வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.. அதேபோல, சேலம் விமான நிலையத்திலிருந்து, தருமபுரிக்கு வருகை தரும் முதல்வருக்கு சேலம், தருமபுரி திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications