புதுச்சேரிக்கு குஷி.. லிஸ்ட்டில் சத்தியமூர்த்தி வந்துட்டாரு.. 2 பாசிட்டிவ்.. சூப்பரா யோசிக்கும் பாஜக
சென்னை: புதுச்சேரி அரசியலில் பரபரப்புகள் கிளம்பி உள்ளன.. எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், பாஜகவின் வியூகங்களும் வேகம் எடுத்து வருகின்றன.
பாண்டிச்சேரி அரசில் ஊரக வளர்ச்சித்துறையின் செக்ரட்டரியாக இருப்பவர் சத்தியமூர்த்தி ஐ.எஃப்.எஸ்.. மக்களுக்கு சேவை செய்வதில் நிறைய ஆர்வம் உடையவர்.. புதுச்சேரி அரசில் செயல்பட்டு வரும் 100 நாள் வேலை திட்டத்தை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியவர் இவர்தான்.

தில்லுமுல்லுகள்: அதுமட்டுமல்ல, அரசு தரப்பில் எதிர்பார்க்கும் "சிலபல" தில்லுமுல்லுகளுக்கு இடம் கொடுக்காமல் திட்டத்தின் பலன் முழுமையாக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததுடன், 100 நாள் வேலைத்திட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பலனாளிகளை சேர்த்து மக்களுக்கான அதிகாரியாக உருமாறியவரும் சத்தியமூர்த்திதான்.
இந்த அனைத்து காரணங்களுக்காகவுமே, மாநில அரசின் கோபத்தை சத்தியமூர்த்தி நேரடியாக எதிர்கொள்ள வேண்டியிருந்ததாம். அதனால்தான், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சொல்லி, பாண்டிச்சேரியிலிருந்து அந்தமானுக்கு சத்திய மூர்த்தியை சமீபத்தில் டிரான்ஸ்பர் செய்துவிட்டதாக தகவல்கள் கசிந்திருந்தன.
தமிழிசை: சத்தியமூர்த்திக்கு டிரான்ஸ்பர் என்றதுமே, இதனையறிந்த புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி அடைந்து, சத்தியமூர்த்தியை மாற்றிய உத்தரவை திரும்பபெற வேண்டும் என்று அவருக்கான போராட்டத்தையும் முன்னெடுத்ததுடன், துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் கோரிக்கை கடிதம் கொடுக்கவும் 100 நாள் வேலைத்திட்டத்தின் பலனாளிகள் முயற்சி எடுத்தனர். இதைத்தவிர, சத்தியமூர்த்திக்காக 300க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் போராட்டங்களையும் நடத்தினார்கள்..
இதற்கெல்லாம் காரணம், முன்பெல்லாம் இந்த 100 நாள் வேலை உறுதி திட்டத்தை பொறுத்தவரை, வருடத்துக்கு சில நாட்கள் மட்டுமே பெண்களுக்கு வேலை கிடைத்து வந்ததாம்.. ஆனால், சத்தியமூர்த்தி பொறுப்புக்கு வந்ததுமே, வருஷத்துக்கு 6 மாசம் வரை பெண்களுக்கு வேலை கிடைத்திருக்கிறதாம்.. இந்த நன்றிக்காகவே, அவரை டிரான்ஸ்பர் செய்யக்கூடாது என்று கொந்தளித்து சொன்னார்கள் புதுச்சேரி பெண்கள்.
புதுச்சேரி அரசியல்: இந்த போராட்டங்கள் எல்லாமே புதுச்சேரி அரசியலில் மிகப்பெரிய பரபரப்பையும் 3 மாதங்களுக்கு முன்பு ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் மீண்டும் சத்தியமூர்த்தியின் பெயர் புதுச்சேரி அரசியலில் அடிபட துவங்கியிருக்கிறது..!
காரணம், என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் பாண்டிச்சேரி தொகுதியில் பாஜக போட்டியிடுவது முடிவாகி விட்டது. இதனை முறைப்படி முதல்வர் ரெங்கசாமி சமீபத்தில் அறிவித்துவிட்டார்.
பாசிட்டிவ் தகவல்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை சௌந்திரராஜன், புதுவை அரசின் ஐ.எஃப்.எஸ். அதிகாரி சத்தியமூர்த்தி ஆகியோரில் ஒருவரை களமிறக்க பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாக தொடர்ந்து தகவல்கள் பரவி வந்தது. இந்த நிலையில், சத்தியமூர்த்தியை பற்றி உளவுத்துறை மூலமும் தனியார் ஏஜென்சி மூலமும் தனித்தனியாக ஒரு சர்வே ரிப்போர்ட்டை எடுத்துள்ளதாம் பாஜக மேலிடம். அந்த இரண்டு ரிப்போர்ட்டிலும் சத்தியமூர்த்திக்கு பாசிட்டிவ்வான சிக்னல் கிடைத்துள்ளதாம்.
அதேசமயம், சத்தியமூர்த்தியை பற்றி முதல்வர் ரெங்கசாமியிடமும் ஆலோசித்துள்ளது பாஜக தலைமை என்கிறது புதுவையிலிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள்..
முடிவு என்ன: ஆனால், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் நிறுத்தப்படும் வேட்பாளரைப் பொறுத்து சத்தியமூர்த்தி பரிசீலிக்கப்படுவார், அதுவரை அவரது பெயரும் பேனலில் இருக்கும் என்கிற தகவலும் நமக்கு கிடைக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications