Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் கார்டு வைத்துள்ளோருக்கு மகிழ்ச்சி.. திருநெல்வேலியில் மாரியம்மாவை பாத்தீங்களா? சபாஷ் தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளில் விற்பனையாகாத, பொங்கல் மளிகை தொகுப்பில் உள்ள பொருட்களை, தனித்தனியே ரேஷன் அட்டைதாரர்களிடம் விற்குமாறும், அதற்குரிய பணத்தை முன்கூட்டியே செலுத்துமாறும், கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறியதாகவும், இதனால் ஊழியர்களிடம் அதிருப்திக்கு உள்ளாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களுடன், கட்டுப்பாடற்ற பொருட்களான உப்பு, டீ துாள், சாம்பார் பொடி, சோப்பு வகைகள், மசாலா பொடிகள், பெருங்காயம் என 30க்கும் மேற்பட்ட மளிகை பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.

ration ration shops tirunelveli

அறிவுறுத்தல்: இந்த கட்டுப்பாடற்ற கூடுதல் மளிகை பொருட்களை வாங்கவேண்டும் என்று பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என அரசு சார்பில் ஏற்கனவே ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், சில இடங்களில் ரேஷன் பொருட்களை வாங்க வருவோரிடம் மளிகையை, ஊழியர்கள் கட்டாயப்படுத்தி விற்பதாகவும், இதன்காரணமாக பல இடங்களில் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதமும் வெடிப்பதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, மளிகை பொருட்களுக்கான மொத்த தொகையையும் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு நேரிடுவதுடன், விற்பனையாகாத பொருட்களுக்கு சொந்த பணத்தை செலுத்த வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுவிடுகிறதாம்.
இதனால், ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் மளிகைப் பொருட்களின் எண்ணிக்கையை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விற்பனையாளர்கள் கோரிக்கைகளை விடுத்தவண்ணம் இருந்தனர்.

எச்சரிக்கை: இதையடுத்து, ரேஷன் கடைக்கு வருவோரிடம் மளிகை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்கக்கூடாது என்றும், அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன், இதுதொடர்பாக, கடைகளில் நோட்டீஸ் ஒட்டுமாறும், மண்டல இணை பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் விற்பனையாகாத, பொங்கல் மளிகை தொகுப்பில் உள்ள பொருட்களை, தனித்தனியே கார்டுதாரர்களிடம் விற்குமாறும், அதற்குரிய பணத்தை முன்கூட்டியே செலுத்துமாறும், கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்திருப்பது, ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

மளிகை தொகுப்புகள்: அதாவது, பொங்கல் தொகுப்பில், பல கடைகளில் மளிகை தொகுப்புகள் முழுவதுமாக விற்கப்படவில்லையாம்.. இதுகுறித்து, ரேஷன் ஊழியர்கள் சொல்லும்போது, "மளிகை தொகுப்பு அனுப்பியதில் பல கடைகளில், 5 - 10 தொகுப்புகள் விற்கப்படவில்லை என்பதால், அந்த பொருட்களை, தனித்தனியே ரேஷன் அட்டைதாரர்களிடம் விற்குமாறும், அதற்குரிய பணத்தை சங்கத்தில் செலுத்துமாறும், கூட்டுறவு பண்டகசாலை அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

பொருட்கள் விற்கும் முன்னதாகவே கடைகளில் எத்தனை தொகுப்பு மீதம் உள்ளதோ, அதற்கு உரிய பணத்தை முன்கூட்டியே செலுத்துவது ஊழியர்களுக்கு சிரமமான விஷயம். எனவே, இதுகுறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி, முன்கூட்டியே பணம் செலுத்த சொல்வதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

அரிசியில் வண்டு: இதனிடையே, திருநெல்வேலியில், பத்தமடை ரேஷன் கடையில் விநியோகிக்கப்பட்ட அரிசியில் வண்டுகள் இருந்ததாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது.. திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பேரூராட்சி பகுதி 1 ரேஷன் கடையில் அரிசியில் வண்டுகள் இருந்துள்ளன.. மாரியம்மாள் என்பவர் இது குறித்து புகார் அளித்ததுடன், அரிசியில் வண்டு இருந்தது சம்பந்தமான வீடியோவும் வெளியானது.

இதனையடுத்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டனர்.. அப்போது அந்த ரேஷன் கடையில் ஒரு மூட்டையில் மட்டும் வண்டுகள் இருந்ததும், தவறுதலாக அந்த பெண்ணுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்தது.. வண்டுகள் இருப்பதை கண்டு கொள்ளாமல் அரிசி வழங்கிய ரேஷன் விற்பனையாளர் சங்கரலிங்கம் என்பவரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவானது, மக்களுக்கு நிம்மதியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.

புகார் எண்கள்: ரேஷன் முறைகேடு உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் தமிழக அரசிடம் நேரடியாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 5950 என்ற தொடர்பு எண்ணை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+