ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்.. கூட்டுறவு சங்கங்கள் மூலம் பட்டாசு.. தமிழக அரசு மீண்டும் சர்ப்ரைஸ்
சென்னை: கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.20 கோடிக்கு பட்டாசுகள் விற்க ஏற்பாடு செய்திருப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.. அதேபோல, மற்றொரு முக்கிய மகிழ்ச்சி தகவலையும் அமைச்சர் தெரிவித்திருப்பது, பொதுமக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு மலிவு விலையிலும், இலவசமாகவும் வழங்கப்படுகின்றன..

அந்தவகையில், பாமாயில் ஒரு பாக்கெட் ரூ.25க்கும், துவரம் பருப்பு ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது... இதனால் தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பலனடைந்து கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல, பண்டிகை காலம் துவங்கிவிட்ட நிலையில், அதுவும் தீபாவளி நெருங்கவிட்ட நிலையில், இருப்புகளை ரேஷன் கடைகளில் அதிகப்படுத்தி தயாராக வைத்திருக்கும் நடவடிக்கையும் முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மளிகை பொருட்கள்: இதுபோக, குறைந்த விலையில் 15 மளிகை பொருட்களை மக்களுக்கு கொடுக்கவும் அரசு முடிவு செய்து, அதன்படி, ரூ 499 -க்கு மளிகை பொருள் தொகுப்பானது, அமுதம் பிளஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த மளிகை தொகுப்பில், கடுகு+ உளுத்தம் பருப்பு- 125 கிராம் சீரகம்- 100 கிராம் வெந்தயம்- 100 கிராம் சோம்பு- 50 கிராம் மிளகு- 50 கிராம் மிளகாய்- 250 கிராம் தனியா- 500 கிராம் மஞ்சள் தூள் 50 கிராம் புளி- 500 கிராம் உப்பு- 1 கிலோ உளுத்தம் பருப்பு - 500 கிராம் கடலை பருப்பு- 200 கிராம் பாசிப்பருப்பு- 200 கிராம் வறுகடலை- 200 கிராம் பெருங்காயத்தூள்- 15 கிராம் என மொத்தம் 3.840 கிலோ கொண்ட பொருட்கள் ரூ 499 க்கு கிடைத்து வருகிறது.
பட்டாசு விற்பனை: இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு மகிழ்ச்சி செய்தியையும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.. அதன்படி தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் 107 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 166 மையங்களில் பட்டாசு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை, காமதேனு கூட்டுறவு அங்காடியில் கூட்டுறவுத் துறையின் மூலம் "கூட்டுறவு கொண்டாட்டம்" என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் சொன்னதாவது:
கூட்டுறவு சங்கங்கள்: "தீபாவளி பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பல்வேறு வகையில் கொண்டுபோய் சேர்க்கப்படுகிறது. தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்கள் பட்டாசு விற்பனையிலும் ஈடுபட்டிருக்கிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த பணி செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மளிகை பொருட்கள் மற்றும் பட்டாசு ஆகியவை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக எளிய முறையில் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பபட்டுள்ளது.
மளிகை தொகுப்பு: 3 வகையான தொகுப்புகள் பொதுமக்கள் விற்பனைக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு அங்காடியில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்குவதை சேவையாக செய்து வருகிறது. மக்களுடைய நம்பிக்கையை பெற்று தரமான பொருட்களை குறைந்த விலையில் தரும் நிறுவனம்தான் கூட்டுறவு சங்கம். இப்போது புதிதாக அதிரசம், முறுக்கு செய்யும் தொகுப்பு ரூ.190-க்கு அளிக்கின்றனர்.
மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பிரீமியம் மற்றும் எலைட் என 2 வகையாக வழங்கப்படுகிறது. அதில் பிரீமியம் ரூ.199-க்கும், எலைட் ரூ.299-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சிறிய குடும்பத்தினரும் பெரிய அளவில் சேமிக்கும் தொகுப்பாக அளித்து வருகின்றோம். இது குடும்ப தலைவிகளிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
பட்டாசு விற்பனை: வருடந்தோறும், கூட்டுறவு சங்கங்கள் பட்டாசு விற்பனையில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது. அதுபோல, இந்த வருடமும் தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் 107 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 166 மையங்களில் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வருடம் விற்பனை ரூ.20 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications