Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகளுக்கு ஹேப்பி.. இலவச மின்சாரம்? தமிழக மின்வாரியம் சர்ப்ரைஸ்.. இன்னும் 2 மாசம்தான்.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயிகளுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகி இருக்கிறது.. மின் இணைப்புகள் குறித்து, மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தகவலை தெரிவித்துள்ளனர். அது என்ன?

கடந்த 2020, ஆகஸ்ட் 5ம் தேதி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமானது, திருத்தம் ஒன்றினை கொண்டுவந்திருந்தது. அதன்படி, விவசாயிகள் இலவச மின்சாரம் பெறவேண்டுமானால், அரை ஏக்கர் நிலம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும், அத்துடன், ஆகஸ்ட் 5, 2020க்கு பிறகு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு மட்டும்தான் இந்த திருத்தம் பொருந்தும் என்று அறிவித்திருந்தது.

Happy news for Tamil Nadu Farmers and Tangedco Big Announcement about 30000 new agricultural Free electricity connections

அடுத்த அதிரடி: இந்த அறிவிப்பினால், 2020 ஆகஸ்ட் 5ம் தேதிக்கு முன்பே விண்ணப்பித்திருந்த, கிட்டத்தட்ட 4 லட்சம் விண்ணப்பதாரர்கள் பெரும் ஏமாற்றமடைந்துவிட்டார்கள்.. எனினும் சில மாதங்களுக்கு முன்பு, தமிழக அரசு மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

அதில், "புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தமானது 2020 ஆகஸ்ட் 5க்கு பிறகு விண்ணப்பம் செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், அதற்கு முன்பு விண்ணப்பம் செய்திருந்தால் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது, அதனால், கிடப்பில் போடப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரிபார்த்து விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சாரம் தரவேண்டும்" என்று கூறியிருந்தது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மின்சாரத்துறை: அதுமட்டுமல்ல, 2023 -24ம் நிதியாண்டில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று, அப்போது மின்சாரத்துறை அமைச்சராக பதவியிலிருந்த செந்தில் பாலாஜி, சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதையடுத்து, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளை முதல்வர் ஸ்டாலினும், கடந்த ஜூலை மாதம் துவக்கி வைத்திருந்தார்..

அந்தவகையில், தற்போது திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, கிட்டத்தட்ட 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மேல் இலவச மின்சார இணைப்பினை தந்துள்ளது.. நடப்பு நிதியாண்டில் 50000 விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்படி, சீனியாரிட்டி அடிப்படையிலேயே இந்த மின் இணைப்பு வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

விவசாயம்: அதாவது, விவசாயத்திற்கு சாதாரண மற்றும் சுயநிதி பிரிவுகளில் மின் இணைப்புகளை வழங்கி வரும்நிலையில், சுயநிதி பிரிவில் மின்சாரம் இலவசம், வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும். ஆனால் சாதாரண பிரிவில் மின்சாரம் மற்றும் வழிதட செலவு என அனைத்தும் இலவசம் என்பதால், இப்படி ஒரு முடிவை அரசு முன்னெடுத்தது.

இதுவரை 50 சதவீதம் கூட மின் இணைப்புகள் வழங்கப்படவில்லையாம். நாளையுடன் இந்த ஆண்டுக்கான நிதியாண்டு முடிவடைய உள்ள நிலையில் இதுவரை வெறும் 20,000 இணைப்புகள்தான் வழங்கப்பட்டுள்ளதாம். இது விவசாயிகளுக்கு மிகுந்த கவலையை உண்டுபண்ணி வரும்நிலையில், மின்வாரியம் ஒரு நல்ல செய்தியை சொல்லியிருக்கிறது.

அதிரடி உத்தரவு: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சென்னை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், கடந்த டிசம்பரில் வரலாறு காணாத கன மழை பெய்ததால் அதிகளவு மின்சாதனங்கள் பழுதாகிவிட்டன.. அதனால், கையிருப்பில் உள்ள உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதால், அவைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.. அதனால்தான் இந்த வருடம் மின் இணைப்பு வழங்கும் பணி பாதிக்கப்பட்டுவிட்டதாம்.

எனவே, வழங்க வேண்டிய 30 ஆயிரம் மின் இணைப்புகளை அடுத்த 2 மாதங்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் உறுதி தரப்பட்டுள்ளது. இந்த உறுதியானது, விவசாயிகளுக்கு நிம்மதியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+