எந்த தேதி, நேரம் பொங்கல் தொகுப்பை வாங்க வேண்டும்? இந்த மாசம் ரேஷன் வாங்கிட்டீங்களா? முக்கிய உத்தரவு
சென்னை: 2.21 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பை தமிழக அரசு வழங்க உள்ள நிலையில் இதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகளும் இன்று முதல் துவங்கியிருக்கின்றன.. இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் முக்கிய உத்தரவு ஒன்றினை அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார்.
பொங்கலை முன்னிட்டு, அரிசி கார்டு தாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பை அரசு அறிவித்துள்ள நிலையில், மீண்டும் ஒரு முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது. இது ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

டோக்கன்கள்: பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் குறித்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளதுடன், பண்டிகைக்கு முன்பு பரிசு தொகுப்பினை வழங்கிடும் வகையில் டோக்கனில் தேதியை குறிப்பிடவும் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி இன்று முதல் வீடு வீடாக டோக்கன்கள் விநியோகிக்கும் பணிகளும் ஆரம்பமாகியிருக்கின்றன.. ரேஷன் கடை ஊழியர்கள் இந்த டோக்கன்களை வழங்கி வருகிறார்கள்.
எந்த தேதி, நேரம் கடைக்கு வந்து பொங்கல் தொகுப்பை வாங்க வேண்டும் என்ற விபரம் அடங்கிய, டோக்கன்களை கார்டுதாரர்கள் வீடுகளில் வழங்கும் பணியில் ரேஷன் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்... இதையடுத்து, ரேஷன் கடைகள் வாயிலாக, வரும், 9ம் தேதி துவங்குகிறது. இந்த பணிகளை, 13ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது..
அமைச்சர் உத்தரவு: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பான அனைத்து பணிகளும் இப்படி துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோக முன் ஏற்பாடு குறித்து, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, சென்னை தலைமை செயலகத்தில், அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சக்கரபாணி பேசும்போது, "ரேஷன் பொருட்கள் இருப்பு மற்றும் வினியோக நிலையை மாநிலம் முழுதும் கண்காணித்து, உடனுக்குடன் குறித்த காலத்தில் கார்டுதாரர்களுக்கு அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும். தோகையை வெட்டாமல் முழு கரும்பும் கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
ஒரே தவணை: இதனிடையே ரேஷன்தாரர்களுக்கு 2 விதமான மகிழ்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது.. அதாவது, வரும் வாரம் முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதால், கடைக்கு வரும் கார்டுதாரர்களுக்கு, அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் வழங்குமாறு, கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்..
அதேபோல, தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறையாகும்.. அதற்கு மாற்றாக, அந்த வாரங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாக செயல்படும்.
விடுமுறை இல்லை: ஆனால், பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு அறிவித்துள்ளதால், வரும் 3 மற்றும் 10ம் தேதி, ரேஷன் கடைகளுக்கு வேலை நாளாக அறிவித்து, உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது... இந்த வேலை நாட்களை ஈடுசெய்வதற்காக ஜனவரி 15 மற்றும் பிப்ரவரி 22ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆக, ரேஷன் பொருட்களை ஒரே தவணையில் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதும், ரேஷன் கடைகளுக்கு 2 வெள்ளிக்கிழமைகளின் விடுமுறைகளை கேன்சல் செய்துள்ளதும், சர்க்கரை அட்டைதாரர்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications