வேலூருக்கு ஹேப்பி.. கோவையும் துள்ளுது, பெரம்பலூரும் மகிழுது.. எல்லாமே ஆட்டோமேடிக்.. தமிழக அரசு சபாஷ்
சென்னை: மழைமானிகள் குறித்தோ, தானியங்கி வானிலை நிலையங்கள் குறித்தோ எந்த கவலையும் இல்லை. அந்தவகையில், தமிழகத்துக்கு மத்திய அரசு நல்ல செய்தி சொல்லிஉள்ளது..
மழைப்பொழிவு மற்றும் வானிலை அளவீட்டு விபரங்களை, நிகழ்நேர அடிப்படையில் பெறுவதற்காக, 1,400 இடங்களில் புதிய தானியங்கி மழைமானிகள், 100 இடங்களில் புதிய தானியங்கி வானிலை நிலையங்களை, 32 கோடியில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அதிதிறன் மிக்க மிக விரைவான கணினி சேவைகளை பெற, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின், "ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர்" உடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.
முன்னறிவிப்பு: இதன் அடிப்படையில் வெள்ளம், புயல், நில அதிர்வு போன்ற பேரிடர்களை கண்காணித்து, அபாயங்களை குறைக்க, புதிதாக தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்.. அதுமட்டுமல்ல, வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்தும் வகையில், ராமநாதபுரம், ஏற்காடு ஆகிய நகரங்களில், "டாப்ளர் ரேடார்" மொத்தம் 56 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, தமிழக அரசு சார்பில் இன்னொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அதன்படி, தமிழகம் முழுவதும் பெய்யும் மழை அளவை துல்லியமாக அறியும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும், புதிதாக தானியங்கி மழைமானிகள், தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க தமிழக அரசின் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர்: அதன்படி, வேலூர், கோவை மாவட்டத்திலும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை, மொத்தம் 22 இடங்களில் புதிய தானியங்கி மழைமானிகளும், 2 தானியங்கி வானிலை மையங்களும் அமைக்க அனுமதி தரப்பட்டுள்ளது.
அந்தவகையில், பேர்ணாம்பட்டு வட்டம், மேல்பட்டி சந்தைமேடு பகுதியில் அமைந்துள்ள தமிழக ஊரக வாழ்வாதார மேம்பாட்டு இயக்கத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை கட்டிடத்தின் அருகில் தானியங்கி மழைமானி அமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் 22 இடங்களிலும் தானியங்கி மழைமானிகள் அமைக்கப்பட்டு வருவதால், இவைகள் அனைத்துமே விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு அனுமதி: இதுபோலவே, பெரம்பலூர் மாவட்டத்தில் 18 இடங்களில் மழைமானிகள் அமைக்கப்படுகின்றன.. விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 43 தானியங்கி மழைமானிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. அதுபோல, கோவை மாவட்டத்திலும், புதிதாக, 54 தானியங்கி மழைமானிகள் மற்றும், 5 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க, தமிழக அரசு அனுமதி தந்துள்ளது.
அந்தவகையில், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்துக்குள் தானியங்கி மழைமானி அமைக்கும் பணி துவக்கப்பட்டிருக்கிறது. வடக்கு வட்டம்-5, அன்னூர்ர் வட்டம்-5, மேட்டுப்பாளையம்-7, கோவை தெற்கு-1, சூலுார்-6, பேரூர்-5, மதுக்கரை-5, பொள்ளாச்சி-5, கிணத்துக்கடவு-3, ஆனைமலை-6, வால்பாறை-6 என மொத்தம், 54 தானியங்கி மழைமானி நிலையங்கள் அமைக்கப்படும்.
உறுதி: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, அன்னுார், பேரூர், கோவை வடக்கு வட்டங்களில் தலா ஒரு தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெறுவதால், இந்த பணிகள் முடிந்து, விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் உறுதி தந்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications