தமிழகத்துக்கு ஹேப்பி.. இப்பவே 5 வந்தே பாரத் ரயில்கள் ரெடியா இருக்கு.. சென்னை ஐசிஎப் இப்படி அசத்துதே
சென்னை: சென்னை பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலை ரயில் பெட்டிகள் தயாரிப்பில் உலக நாடுகளை வியக்க வைத்து வரும்நிலையில், இன்னொரு குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது.
உலக அளவில் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் மிக முக்கியமான தொழிற்சாலையாக, சென்னையின் ஐசிஎஃப் (ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை) திகழ்ந்து வருகிறது..

ரயில் பெட்டிகள்: ஐ.சி.எப்., எனப்படும் இந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில், 500க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில், 75,000க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதில் பாரத் ரயில் ரயில்களின் தயாரிப்புகளும் அடங்கும்.. சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள், ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன... வந்தே மெட்ரோ ரயில் உள்ளிட்ட ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் இங்குதான் நடைபெற்று வருகின்றன.
வந்தே பாரத்: அம்ரித் பாரத் ரயில் ஏற்கெனவே 2 ரயில்கள் தயாரித்து அனுப்பிய நிலையில், கூடுதலாக அம்ரித் வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல, ஐசிஎஃப்-ல் 2024-25-ம் நிதியாண்டில் 3,000 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானபோது, வந்தே பாரத் ரயில் பெட்டிகள், எல்எச்பி பெட்டிகள், மெமு ரயில் பெட்டிகள் போன்றவை அதிக அளவில் இங்குதான் தயாரிக்கப்பட உள்ளனவாம்..
அந்தவகையில், ஐசிஎஃப்-ல் 2024-25-ம் நிதியாண்டில் மொத்தம் 3,000 பெட்டிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில், 644 வந்தே பாரத் ரயில் பெட்டிகள், 276 மெமு ரயில் பெட்டிகள், 480 மின்சார ரயில் பெட்டிகள், 1400 எல்எச்பி (நவீன பெட்டிகள்) பெட்டிகள் உள்பட 3,000 ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
படுக்கை வசதிகள்: கடந்த ஜூலை 10ம் தேதியன்றுகூட, சென்னை ஐ சி எப் தொழிற்சாலைக்கு 50 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மற்றும் 50 வந்தே மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது.
இப்படிப்பட்டசூழலில், 5 புதிய வந்தே பாரத் ரயில்கள் இங்கு தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "ஐசிஎப்-ல் இதுவரை 60க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.. இந்த நிதியாண்டில் மட்டும் 3515 ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவைகளில் 658 வந்தே பாரத் ரயில் பெட்டிகளும், 1536 எல்எச்பி பெட்டிகளும் இடம்பெற உள்ளது.
எப்போது இயங்கும்: இப்போதைக்கு 5 புதிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு இறுதி கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். அடுத்து 2 வாரங்களில் இந்த 5 ரயில்களும் ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகே இந்த ரயில்களை எந்த வழித்தடங்களில் இயக்குவது? என்பது குறித்து ரயில்வே வாரியம் அறிவிக்கும்" என்றனர்.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications