விவசாயிகளுக்கு குஷி.. இலவச மின்சாரம்.. தட்கலில் மின் இணைப்புகள்.. தமிழக மின்வாரியம் மீண்டும் அதிரடி
சென்னை: விவசாய மின் இணைப்புகள் வழங்குவது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.. இதையடுத்து, புதிய மின் இணைப்புகள் கேட்டு விண்ணப்பித்தோருக்கு எப்போது மின் இணைப்புகள் வழங்கப்படும்? என்பது குறித்த ஆர்வமும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, விவசாயிகளுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகவும், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும் வழங்கி வருகிறது. விவசாயத்தை ஊக்குவிக்கவே இந்த இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது..

விவசாயிகள்: அந்தவகையில், 2 லட்சம் விவசாயிகளுக்கு மேல் இலவச மின்சார இணைப்புகளை தமிழக அரசு செய்து தந்துள்ளது... தற்சமயம் 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஒரு இணைப்புக்கு வருடத்துக்கு மின்சார வாரியத்துக்கு 30,000 ரூபாய் செலவாகிறது.. இதை, தமிழக அரசே மானியமாக வழங்குகிறது.
ஆனால் தற்போது மின் வாரியமும், தமிழக அரசும் நிதி நெருக்கடியில் இருப்பதால், வருடந்தோறும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கையில் மட்டுமே, விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2022 - 23ல், 50,000 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன.
அனுமதி: கடந்த 2023 - 24ல், 50,000 இணைப்புகளுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்ட நிலையில், இதில் வெறும் 20,000 இணைப்புகள் மட்டுமே கடந்த மார்ச் வரை வழங்கப்பட்டிருக்கின்றன.
இதனால், மற்ற விண்ணப்பதாரர்கள் மின் இணைப்பு கிடைக்காமல் அதிருப்திக்கு ஆளாகி, சுயநிதி பிரிவில் விரைவு (தட்கல்) திட்டத்தின்கீழ், வழித்தட செலவுக்கான முழு தொகையையும் செலுத்திய விவசாயிகள் மின் இணைப்பு வழங்குமாறும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து நிலுவையிலுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, விவசாய மின் இணைப்புகளை வழங்க தமிழக அரசிடம் மின் வாரியம் அனுமதி கேட்டிருப்பதாக கடந்த மாதம் தகவல் வெளியாகியிருந்தது.
நிலுவை: இந்நிலையில், இதுகுறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. அதாவது, கடந்த ஆண்டில் 50 ஆயிரம் மின் இணைப்பு வழங்க அரசு அளித்த அவகாசம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்ட நிலையில், அந்த ஆண்டில் வழங்கியது போக, இதர விண்ணப்பதாரர்களுக்கு இணைப்பு வழங்க அரசிடம் மின்வாரியம் அனுமதி கோரப்பட்டது.. இதைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள 30 ஆயிரம் மின் இணைப்புகளை வரும் 2025 மார்ச் மாதம் வரை வழங்க மின்வாரியத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது












Click it and Unblock the Notifications