புதுஸ்ஸா "மின் இணைப்பு" வாங்கணுமா.. ஜஸ்ட் 7 நாள் போதும்.. இதான் ரூல்ஸ்.. தமிழக அரசின் ஹேப்பி அறிவிப்பு
சென்னை: புதிய மின் இணைப்புகள் வாங்குவது குறித்து, திருத்தங்கள் சில கொண்டுவரப்பட்டுள்ளது.. அதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் பொறுப்பை மாநில அரசு தன்வசமே வசம் வைத்திருக்கிறது. இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) என்ற அமைப்பை உருவாக்கி செயல்படுத்தியும் வருகிறது.

இதன்கீழ் 2 விதமான துணை அமைப்புகள் உள்ளன.. அவை, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் (TANTRANSCO) மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) ஆகும்.
கஸ்டமர்கள்: இதில், புதிதாக கஸ்டமர்கள், மின் இணைப்பை பெற வேண்டுமானால், அதற்கான வசதிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்து வருகிறது.. இப்போது, புதிய இணைப்பை கேட்டு விண்ணப்பித்தால், அதை பெறுவதற்கான கால அளவு 30 நாட்களாக இருக்கிறது.. இந்த விஷயத்தில் திருத்தம் கொண்டு வர தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) முடிவு செய்திருக்கிறது.. இதற்காக சில மாற்றங்களையும் பரிந்துரை செய்துள்ளது.
புதிய மாற்றங்கள்: அதாவது, தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோரின் வசதி மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்த புதிய மாற்றங்களை கொண்டு வர உள்ளது.. அதன்படி நுகர்வோர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்த 7 நாட்களில் புதிய மின் இணைப்பு வழங்கவும், வழங்க தாமதமானால் நுகர்வோர் அபராதம் கோரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது விதியாக உள்ள நிலையில், இந்த காலக்கெடுவை 7 நாட்களாக குறைக்க தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.. இந்த புதிய திருத்தங்களின்படி 48 மணி நேரத்திற்குள் தற்காலிக மின் விநியோகத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், 7 நாட்களுக்குள் குறைபாடு உள்ள மீட்டர்களை மீண்டும் பொருத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கனெக்ஷன்: ஒருவேளை, புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்து ஏழு நாட்களையும் தாண்டினால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விண்ணப்பதாரருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் அதிகபட்சமாக ரூ.1000 வரை அபராதம் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் கொண்டு வரவுள்ளது.
மேலும், கிரிட் இன்டராக்ட் சோலார் (ஜிஐஎஸ்எஸ்) நிறுவ தாமதத்திற்கு ரூ.71 ஆயிரம் மற்றும் குறைகளை கையாள்வதில் தோல்வி அடைந்தால் ரூ.250, நுகர்வோரின் புகார்களுக்கு பதில் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டால் ஒரு நாளைக்கு ரூ.25 முதல் அதிகபட்சம் ரூ.250 வரையிலும் நுகர்வோர் அபராதம் கோரலாம்.
அபராதம் : அதேபோல, பழுதடைந்த மீட்டர்களை 7 நாட்களுக்குள் மாற்றாவிட்டால் ஒரு நாளைக்கு ரூ.100 வீதம் அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு அபராதம் விதிக்க ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது. நுகர்வோருக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடமையாக இருப்பதால் 6 மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் மின் தடைக்கும் நுகர்வோருக்கு ரூ.50 அபராதம் செலுத்த நேரிடும்" என்று அந்த புதிய திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதோ அந்த ரூல்ஸ்:
- GISS எனப்படும் கிரிட் இன்டராக்டிவ் சோலார் சிஸ்டம் பொறுத்துவதில் தாமதம் எனில் வாடிக்கையாளர்கள் 500 முதல் 1,000 ரூபாய் வரை இழப்பீடு வாங்கிக் கொள்ளலாம்.
- வாடிக்கையாளர்களின் குறைகளை சரியான முறையில் அணுகவில்லை எனில் 50 ரூபாய் இழப்பீடு வாங்க முடியும்.
- வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றால் 25 முதல் 250 ரூபாய் வரை இழப்பீடு வாங்கலாம்.
- மின்சார மீட்டர்களை மாற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் 100 முதல் 1,000 ரூபாய் வரை இழப்பீடு பெறலாம்.
- பில்லிங் சம்பந்தமாக குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பதில் கிடைக்காவிட்டால் 150 ரூபாய் இழப்பீடு பெற முடியும்.
- புதிய திருத்தங்களின் படி, தற்காலிக மின் விநியோக ஏற்பாடு 48 மணி நேரத்தில் சரிசெய்யப்பட வேண்டும். பழுதடைந்த மீட்டர்களை மாற்ற வேண்டுமெனில் 7 நாட்களுக்குள் செய்து தர வேண்டும். மீட்டர்கள் போதிய அளவில் இருப்பு இல்லை என்று கூறி ஒருபோதும் தாமதிக்கக் கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications