"சென்னை அண்ணா சாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி".. ஆட்டம் பாட்டம் என மக்கள் உற்சாகம்!
சென்னை: சென்னை அண்ணா சாலையில் இந்த வாரம் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சாலையில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் மக்கள் பங்கேற்று உற்சாகமாக ஆட்டம் பாட்டம் போட்டனர்.
எங்கும் பரபரப்பு.. எதிலும் பரபரப்பு என நகரங்களில் வசிக்கும் மக்கள் வேகவேகமாக இயங்குவதை காண முடியும். சாலையில் சென்றாலும் நெரிசல் தான்.. கடை வீதிகளுக்கு சென்றாலும் நெரிசல் தான்.. என நெரிசல் இல்லாத இடங்களையே சென்னை போன்ற பகுதிகளில் காண முடியாது.

இந்த பரபரப்புக்கு ஒருநாள் லீவ் விடும் வகையில், சென்னையின் போக்குவரத்து நெரிசலான பகுதிகளில் அந்த நெரிசலை மறந்து, ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய போக்குவரத்து இல்லா சாலை என்னும் ஹாப்பி ஸ்ட்ரீட் (happy Street) நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது
இந்த நிகழ்ச்சியின்போது சாலையில் முற்றிலும் போக்குரவத்து தடை செய்யப்படும். அங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில், பம்பரம் விடுதல், கோணி பை தாவுதல், டயர் ஓட்டுதல், கயிறு இழுத்தல், செஸ், பரமபதம், கராத்தே, கோலமிடுதல், பாட்டு போட்டி, நடனம் என பாரம்பரிய விளையாட்டுக்கள் முதல் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இசைக்கு ஏற்ப நடனமாடி மகிழ்வார்கள். காவல்துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வும் இடம் பெறும். நகர வாழ்க்கை என்னும் நெருக்கடிக்குள் இருக்கும் சற்று ரிலாக்ஸாக மக்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இது இருக்கும்.
அந்த வகையில், இந்த வாரம் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி சென்னையின் மையப்பகுதியான அண்ணாசாலையில் நடைபெற்று வருகிறது. எந்த நேரத்தில் சென்றாலும் வாகன இரைச்சல் காதில் கேட்டுக்கொணடே இருக்கும் பரபரப்பு மிக்க இந்த சாலையில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் மக்கள் பங்கேற்று உற்சாகமாக ஆட்டம் பாட்டம் போட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்காக அண்ணா சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு முதல் ஜி.பி.ரோடு சந்திப்பு வரை உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி காரணமாக போக்குவரத்து முற்றிலும் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டது. காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications