"நேரா போயிட்டேன்.. எடப்பாடி + ஓபிஎஸ்ஸை பார்த்துட்டேன்".. ஆச்சரியமாக இருக்கா.. பூங்குன்றன் ஒரே போடு
பூங்குன்றன் எடப்பாடி மற்றும் ஓபிஸ் குறித்து மீண்டும் தன்னுடைய முகநூலில் பதிவிட்டுள்ளார்
சென்னை: சுவாமிமலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் சந்தித்து அகம் மகிழ்ந்தேன்.. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? என்று கேள்வி கேட்டு திகைக்க வைத்துள்ளார் பூங்குன்றன்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். எனினும், அவ்வப்போது அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகிறார்.
அந்தவகையில் பூங்குன்றனின் பதிவுகள் என்றாலே, மிகுந்த எதிர்பார்ப்பையும் சில சமயம் ஏற்படுத்திவிடும். கடந்த சில காலமாகவே, அண்ணாமலைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருவதுடன், சில அட்வைஸ்களையும் வெளிப்படையாகவே தந்து வருகிறார்..

கமலாலயம்
இப்போது, அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு நடந்து கொண்டிருக்கிறது.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி கொள்வதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார்.. கட்சிக்காக இதனை விட்டுத் தந்ததாகவும் கூறியிருந்தார்.. பூங்குன்றன் இதுகுறித்தும் தன்னுடைய ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டிருந்தார்.. அதில், "ஓபிஎஸ் மீண்டும் பரதன் ஆகிவிட்டாரா? அப்படி என்றால் இபிஎஸ் ராமன் ஆகிவிட்டாரா? விட்டுக்கொடுத்து விட்டுக் கொடுத்து மீண்டும் மீண்டும் தன்னை பரதன் என்று நிரூபித்து கொண்டிருக்கிற ஓபிஎஸ் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். இபிஎஸ் அவர்களும் ஓபிஎஸ் அவர்களுக்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதே இன்றைய தேவை. இபிஎஸ் ராமனாக மாறுவாரா? பரதனை அரவணைப்பாரா?" என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

ஈபிஎஸ்
இந்நிலையில், சுவாமி மலைக்கு சென்றது பற்றி பூங்குன்றன் இப்போது இன்னொரு பதிவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.. அதில், நெடு நாட்களாக வெளியூருக்கு போகவில்லை. கோயிலுக்கு செல்லும் மனமும் இல்லை. தற்போது நல்ல வாய்ப்பு மலர்ந்தது. நேராக சுவாமிமலைக்குச் சென்றேன். அங்கு ஓபிஎஸ் அவர்களையும், ஈபிஎஸ் அவர்களையும் சந்தித்து அகம் மகிழ்ந்தேன். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? நான் வருவதை ஓபிஎஸ் ரசிகரிடம் தெரிவித்தேன். அவர் சென்று ஈபிஎஸ் ஆதரவாளரிடம், உங்களைக் காண பூங்குன்றன் வந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்.

ஆஜானுபானு
நீங்கள் கூட்டத்தோடு வருவீர்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். நீங்கள் தனியாக வந்திருக்கிறீர்களே! நீங்கள் எப்போதும் எளிமை தான் போங்க.. என்றார் தம்புடு. பிறகு ரசிகரும் வந்தார். அவர்கள் இருவரின் உபசரிப்பில் உள்ளம் மகிழ்ந்தேன். அன்பால் மூவரும் கலந்தோம். அம்மாவின் பிள்ளைகளாய் இணைந்தோம். அரசியல் பேசி சிரித்தோம். பிறகு என் அப்பனை காணச் சென்றேன். அழகன் முருகனைக் கண்டேன். அதிசயத்து நின்றேன். உயரமான உருவம், ஆஜானுபாகுவான உடல், அழகிய முகம் என கம்பீரமாய் காட்சி தந்தான் முருகன். சுவாமிமலையில் எப்போதும் எளிமையாய் காட்சி தருவான் முருகன்.

சொக்கிப்போகும்
ஆனால் சில நேரங்களில் தங்க அலங்காரத்தோடு, வைர வஜ்ரவேலை தாங்கி அவன் நிற்கும் காட்சி என்னை வியக்க வைத்திருக்கிறது. நீங்களும் அந்த காட்சியில் எப்போது முருகன் வருவான் என்று கேட்டு, பாருங்கள் உங்கள் உள்ளமும் கந்தன் அழகில் சொக்கிப் போகும். தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு கடல் அலை என திரண்டு வந்த கூட்டம் சற்று அடங்கியிருந்தது. அதுவே எனக்கு வசதியாகப் போனது. நெடு நேரம் அமர்ந்து அவன் அழகை கண் குளிரக் கண்டேன். உள்ளம் உருகி நின்றேன். முருகனுடைய மந்திரங்களை கேட்டு மெய் மறந்த போது, தீபாராதனை காட்டப்பட்டது.

ஆனைமுகன்
முருகனின் அழகை அந்த தீப ஒளி வெளிச்சம் போட்டுக் காட்டியது. தாய் காஞ்சி காமாட்சி எப்படி கண்களை உருட்டிப் பார்ப்பாளோ! அதுபோல ஆறுமுகன் வந்திருப்பவர்களை பார்த்தது தெரிந்தது. சுவாமிநாதனின் வசீகரம் என்னைக் கவர்ந்தது. என்னை மட்டுமா? உங்களுடைய கவனத்தையும் காந்தம் போல அவன் ஈர்க்கவே செய்வான். நிரம்பிய மனதோடு தரிசனம் முடித்து இறங்கி வந்தேன். தம்புடு அவர்களின் கடையில் நெடுநேரம் சங்கரோடு இணைந்து நடப்பவற்றையும், நடந்தவற்றையும் பகிர்ந்தோம். பின்னர் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரோடும் சென்று ஆனைமுகனை வணங்கினேன். மன்னிக்கவும் தம்புடுவோடும், சங்கரோடும் சென்று ஆனைமுகனுக்கு பேரிச்சம் பழத்தை ஊட்டி உள்ளம் மகிழ்ந்தோம்.

துர்கா அம்மா
அன்னபூரணியின் பிள்ளைகள் ஒன்று சேர ஊட்டியது ஆனைமுகனுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் போல, ஆனந்தமாய் எங்களுக்கு அருளாசியை வழங்கியது. மனம் கலந்தோம். உற்சாகம் அடைந்தோம். பேறு உவகை கொண்டோம். என் புகழ் பாடினாலும், வசைபாடினாலும் நீங்கள் எல்லோரும் எனக்காக அம்மா விட்டுச் சென்ற உறவுகள். உங்களை பிரித்து பார்க்கும் எண்ணம் எனக்கு எழவில்லை. அதை என் மனம் விரும்பவும் இல்லை. எனக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை. உங்கள் அனைவரோடும் இணைந்திருக்கவே நான் விரும்புகிறேன். பின்னர் அந்த நல்ல உள்ளங்களிடமிருந்து விடைபெற்று, முருகன் மாமனோடு துர்க்கா அம்மாவை காணச் சென்றேன் என பூங்குன்றன் பதிவிட்டுள்ளார் .
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications