சென்னையின் முதல் இரும்பு மேம்பாலம்.. இனி ஐந்து நிமிடம் தான் .. மக்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்
சென்னை: சென்னையின் முதல் இரும்பு மேம்பாலம் தியாகராய நகர் தெற்கு உஸ்மான் சாலைக்கு எளிதாக போகும் வகையில் போடப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் 1.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு 131 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. அண்ணா சாலை மற்றும் தியாகராய நகரை சிஐடி நகர் வழியாக இணைக்கும் இந்த மேம்பாலம் குறித்து சூப்பர் அப்டேட் வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள வாகன நெரிசல் சென்னை மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று, இந்த சாலை வழியாக திநகர் செல்வோர், நந்தனத்தை அடுத்து சிஐடி நகர் வழியாக திநகர் பேருந்து நிலையத்தை அடைவார்கள்.. ஆனால் திநகர் சிஐடி நகர் சாலை வழியாக தெற்கு உஸ்மான் சாலை மிகவும் குறுகலானது. இந்த சாலையில் எப்போதும் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும்.

இதில் என்ன சிக்கல் என்றால், சென்னையில் வேளச்சேரி, ஓஎம்ஆர் சாலை, கந்தன்சாவடி, ரேடியல் சாலையில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலை செய்வோர் மற்றும் கிண்டியில் தொழில் நிறுவனங்களில் வேலை செய்வோர் என சென்னையின் ஒரு பாதி மக்கள், அண்ணா நகர், நுங்கம்பாக்கம், திருமங்கலம், அம்பத்தூர், கோடம்பாக்கம், ஆவடி செல்ல திநகர் வழியாகவே செல்வார்கள். வட சென்னையையும், தென் சென்னையும் இணைக்கும் பகுதியின் மையப்பகுதியாக திநகர் இருக்கிறது.
திநகர் பேருந்து நிலையம் வழியாக நுங்கம்பாக்கம் சாலையை பிடித்து லயோலா கல்லூரி வழியாக அண்ணா நகர், நியூ ஆவடி ரோடு, பூந்தமல்லி ஹைரோடு செல்வது மிகவும் எளிது. இதனால் அந்த சாலையை தான் பலரும் பயன்படுத்துகிறார்கள். மிகவும் சிறிய சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள சாலை என்பதால் திநகரில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் அண்ணா சாலை மற்றும் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தை இணைத்து புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
தி.நகர், உஸ்மான் சாலையில் இருந்து அண்ணா சாலை வரை அமைய உள்ள புதிய மேம்பாலத்திற்கான பணிகளை, அமைச்சர் உதயநிதி கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைத்தார்.
சென்னையின் முதல் இரும்பு மேம்பாலமாக அமைக்கப்பட்டு வரும் இந்த பாலத்தில் அண்ணா சாலை மற்றும் தெற்கு உஸ்மான் சாலைக்கு எளிதாக செல்ல முடியும். இந்த மேம்பாலம், 55 துாண்களுடன் 7.5 மீட்டர் அகலம் உடைய இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலம் எப்படி அமைக்கப்படுகிறது என்றால், தி.நகர், துரைசாமி சாலை -- உஸ்மான் சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சாய்தளத்தை தகர்த்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணா சாலை சந்திப்பு வரை, 1.2 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

திநகர் பேருந்து நிலையம் அடுத்த தெற்கு மேற்கு போக் சாலை சந்திப்பில் இருந்து சி.ஐ.டி., நகர், நான்காவது பிரதான சாலை சந்திப்பு வரை, 320 மீட்டர் நீளத்திற்கு, முதற்கட்ட மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடந்து விட்டன. இந்த இரும்பு மேம்பாலம் 6.5 மீட்டர் உயரம் மற்றும் 30 அடி ஆழம் கொண்டதாகவும், பாலத்தின் விரிவாக்க இணைப்புகள் 75 மீட்டர் இடைவெளியில் 20 மீட்டர் கான்கிரீட் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளன.
Chennai’s first Steel Flyover coming up super quick at South Usman Road in T-Nagar. Being built at a cost of 131 Crs it will be 1.2 kms long connecting Anna Salai and T Nagar through CIT Nagar. Set to complete later this year.. #Chennai #Flyover 🏗️🛣️
— Chennai Updates (@UpdatesChennai) March 6, 2024
P.C : Santanu (YT) pic.twitter.com/UQedQmZoTx
பாலத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்தும் வரும் நிலையில் அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால், பணிகளை வேகமாக முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பாலம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரெடியாகிவிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனிடயே 131 கோடியில் சிஐடி நகர் வழியாக அண்ணா சாலை முதல் திநகர் வரை 1.2 கிமீ தொலைவில் அமைக்கப்படும் இந்த மேம்பாலம் தான் சென்னையின் முதல் இரும்பு மேம்பாலம் ஆகும். வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்துடன் இணைக்கப்படும் இந்த மேம்பாலம் வழியாக பனகல் பார்க் சந்திப்பில் இருந்து அண்ணா சாலை வர வெறும் ஐந்து நிமிடம் போதும்.. இந்த பாலம் எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications