தேசத்தை கட்டியெழுப்புவதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பறியது #OurTeachersOurHeroes
பிரதமர் மோடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அன்பான ஆசிரியர்களுக்கு நல் ஆசிரியர் தின வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர்.
சென்னை: நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்பான ஆசிரியர்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆசிரியர்களின் தியாகத்தையும் மாணவர்களை கட்டமைப்பதில் அவர்களின் பங்களிப்பையும் பதிவிட்டுள்ளனர். #OurTeachersOurHeroes #HappyTeachersDay, #DearTeacher என்ற ஹேஸ்டேக் பதிவிட்டும் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மாணவனை வடிவமைப்பதற்கும் நமது தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பறியது. கடின உழைப்பாளிகளான ஆசிரியர்களுக்கு நாம் என்றும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர் தினத்தன்று, நம் ஆசிரியர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம் #OurTeachersOurHeroes" என பதிவிட்டுள்ளார்.

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்னும் மகாகவி பாரதியின் சொல்லை மெய்யாக்கி, தமிழகத்தை தலைநிமிர்ந்து நடைபோடச் செய்தவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள். உயர்கல்வியில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணியில் திகழக் காரணம் தன்னலமற்ற ஆசிரியர்களின் கடின உழைப்பே! #ஆசிரியர்தினம்" என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Recommended Video
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications