குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து.. தலித் மாணவருக்கு வன்கொடுமை.. கடும் நடவடிக்கை வேண்டும்.. எஸ்டிபிஐ
சென்னை: திருச்சி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டியலின மாணவருக்கு சக மாணவர்கள் குளிர் பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் இளங்கலை இறுதியாண்டு படித்து வரும் தலித் மாணவருக்கு அவருடன் படித்து வந்த நண்பர்கள் 2 பேர் குளிர் பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்ததாகவும், மறுநாள் நண்பர்கள் மத்தியில் சிறுநீர் கலந்த குளிர்பானத்தை குடித்ததாக கேலி செய்ததாகவும் தகவல் வெளியானது.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகிய நிலையில் இந்த சம்பவத்திற்கு ஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஹஸ்ஸான் பைஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில், கடந்த ஜனவரி 6 அன்று நடைபெற்ற சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தின் போது, இளங்கலை சட்டப்பிரிவு இறுதியாண்டு படிக்கும் பட்டியலின மாணவர் ஒருவருக்கு, அவருடன் படிக்கும் 2 மாணவர்கள் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து குடிக்க வைத்துள்ளனர். அதோடு அந்த மாணவர்கள் குறிப்பிட்ட அந்த பட்டியலின மாணவரை சிறுநீரை குடித்ததாக மற்றவர்கள் முன்னிலையில் கேலி செய்துள்ளனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் பல்கலைக்கழகம் விசாரணைக் குழு அமைத்துள்ளதாகவும், அந்த அறிக்கையின் அடைப்படையில் காவல்துறையிடம் பல்கலைக்கழகம் புகார் அளிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. பட்டியலின சட்டத்துறை மாணவருக்கு எதிரான இத்தகைய மனிதத்தன்மையற்ற, அநாகரீகமான செயல் கண்டிக்கத்தக்கது. கல்வி நிலையங்களில் பேராசிரியர்களாலும், சக மாணவர்களாலும் பட்டியலின மாணவர்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகள் கவலையளிக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நாங்குநேரியில் பட்டியலின பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவர்களால் ஆயுத தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். ஆகவே, கல்வி நிலையங்களில் முடிவில்லாமல் தொடரும் இத்தகைய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications