யானை இருந்தாலும் ஆயிரம் பொன்.. இறந்தாலும் ஆயிரம் பொன்.. விவேக் மறைவிற்கு ஹர்பஜன் சிங் இரங்கல்
சென்னை: யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் அது உங்களுக்கு பொருந்தும் என நடிகர் விவேக்கிற்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
நடிகர் விவேக் நேற்று முன் தினம் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு இதயத்தையும் நுரையீரலையும் சீராக இயங்க வைக்க முயற்சிகள் செய்யப்பட்டன. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை விவேக்கின் உயிர் பிரிந்தது.

இரங்கல்
இவரது மறைவுக்கு திரையுலகினர்,பொதுமக்கள், அரசியல் பிரபலங்கள், நண்பர்கள் என அஞ்சலி செலுத்தினர். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் , மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
|
குறைவு
அந்த வகையில் கிரிக்கெட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் உங்களை @Actor_Vivek
எப்படி போற்றினாலும் அது குறைவாக தான் இருக்கும். யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் பழமொழி உங்களுக்கும் பொருந்தும் நீங்கள் வாழ்ந்த வாழ்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம். பூமி உள்ள வரையில் உன் கலை பேசும் நீ நட்ட மரங்கள் பேசும் என தெரிவித்துள்ளார்.
|
தினேஷ் கார்த்திக்
அது போல் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் மரணம் மனிதனுக்கு நிச்சயம் என தெரிந்த பின்னும், அதனை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது ஒரு சிலரை இழக்கும் போது மட்டும்.

ஓய்வு
திரைப்படங்களில் தனது நகைச்சுவை மூலம் சமூக கருத்துகளை கொண்டு சேர்த்த ஒரு லெஜெண்ட். தனிப்பட்ட முறையில் எனக்கு மின்னலே மற்றும் ரன் ஆகியப் படங்கள் மிகவும் பிடிக்கும். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications