மச்சி என்ன இப்பிடி பச்சயா பொய் சொல்ற.. நீ லாஸ்லியாவைதான லவ் பன்றே.. சதீஷை கோர்த்துவிட்ட ஹர்பஜன் சிங்
சென்னை: லாஸ்லியாவை லவ் பண்றேன்னு சொன்னியே மச்சி என நடிகர் சதீஷை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் கலாய்த்துள்ளார்.
ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கித் தயாரிக்கும் படம் ஃபிரெண்ட்ஷிப். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கிறார். இவரும் முதல்முறையாக அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் காமெடியனாக நடிகர் சதீஷ் நடிக்கிறார். பஞ்சாபியை தாய்மொழியாக கொண்ட ஹர்பஜன் சிங் தமிழ் மீதுள்ள பற்றின் காரணமாக நீண்ட காலமாக தமிழில் ட்வீட் போட்டு வருகிறார்.

தமிழ் படம்
பொங்கல் வாழ்த்துகள், தீபாவளி வாழ்த்துகள் தொடங்கி இப்போது தமிழில் கமென்ட் கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டார். இதன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் தமிழ் படத்தில் நடித்து வருவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
|
ரசிகர்கள்
மேலும் பிக்பாஸ் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள லாஸ்லியா இந்த படத்தில் நடிப்பதால் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த படம் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் சதீஷ் ஃபிரெண்ட்ஷிப் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் என்றும் தொடரும் இந்த நட்பு. லவ் யூ ஹர்பஜன், லாஸ்லியா என குறிப்பிட்டிருந்தார்.
|
மச்சி என்ன இப்படி
இதற்கு ஹர்பஜன் சிங் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில் மச்சி என்ன இப்பிடி பச்சயா பொய் சொல்ற நீ #Losliya வை தான லவ் பன்றேன்னு சொன்ன.. அன்னிக்கு இந்த விஷயம் தெரியுமா ?? #FriendshipMovie #FriendshipSummer ,😜 நம் நட்பு என்றும் தொடரும் தோழா என கேட்டுள்ளார்.

தோழியாக
இதற்கு சதீஷ் பதில் ட்வீட் போட்டுள்ளார். அதில் அய்யய்யோ எனக்கே இந்த விஷயம் இப்பதான தெரியும். லாஸ்லியாவை ஒரு தோழியாக லவ் யூ என்று சொன்னேன் என நகைச்சுவையாக கூறியுள்ளார். இது போல் ஹர்பஜன் சிங் மற்றும் நடிகர் சதீஷ் இடையேயான இந்த உரையாடல்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications