அடேங்கப்பா.. ஹரி நாடார் கழுத்தில் போட்டுள்ள நகை மதிப்பு எவ்வளவு தெரியுமா? அசர வைக்கும் சொத்து விவரம்
சென்னை: கழுத்திலும், கையிலும் ஏராளமான தங்க நகைகள் அணிந்தபடி வலம் வரும் ஹரி நாடாரிடம் 11 கிலோ தங்க நகைகள் இருக்கின்றன. அவற்றின் மதிப்பு நான்கே முக்கால் கோடி ரூபாய்.
Recommended Video

பனங்காட்டு படை கட்சி சார்பாக ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுகிறார் ஹரிநாடார். இதையொட்டி நேற்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வேட்பு மனுவுடன் தனது சொத்து விவரங்களை அவர் குறிப்பிட்டு உள்ளார். அது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அசையும் சொத்து அதிகம்
ஹரி நாடார் தனது பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதைப் பாருங்கள்: ஹரி நாடார் அசையா சொத்துக்களை விட அசையும் சொத்துக்கள் தான் அதிகமாக இருக்கின்றன. வழக்கமாக அசையா சொத்துக்கள் மதிப்புதான் எல்லா அரசியல்வாதிகளுக்கும் அதிகமாக இருக்கும். ஆனால், இதில் இவர் வித்தியாசமானவர். இதற்கு கழுத்திலும், கையிலும் அதிகமாக அவர் தங்க நகைகளை அணிந்து உள்ளதுதான் காரணம்.

வங்கி கணக்கு
ஹரி நாடார் வங்கி கணக்கில் 35 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருக்கிறது. பல்வேறு நிறுவன பங்குகளில் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். பிறருக்கு கடனாகக் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

6 கார்கள்
45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டொயோட்டா பார்ச்சூனர் கார் உட்பட 6 வாகனங்கள் இவருக்கு சொந்தமாக இருக்கின்றன. இந்த அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு, 4 கோடியே 73 லட்சம் ரூபாய். அதாவது அவரிடம் 11 ஆயிரத்து 200 கிராம் தங்க நகைகள் உள்ளன.

வீடு, நிலம் மதிப்பு
அவரது மொத்த சொத்து மதிப்பு மட்டும் 12 கோடியே 61 லட்சம் ரூபாய். ஆனால் அவர் குடியிருக்கும் வீடு, நிலம் ஆகியவற்றில் மதிப்பு வெறும், 11 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமேயாகும். தங்கத்தின் மீதுதான் அதிக முதலீடு செய்துள்ளார் அவர். தங்கத்தின் மீதான தனது ஆசைதான் இதற்கு காரணம் என்று அவரே முன்பு ஒருமுறை கூறியுள்ளார்.

கழுத்தில் போட்டுள்ள நகைகள்
11 ஆயிரத்து 200 கிராம், அசையும் சொத்துக்கள் வைத்திருக்கும் ஹரி நாடாரின், கழுத்திலும், கையிலும் மட்டும் சுமார் 3 கிலோ தங்க நகைகள் உள்ளன. மற்றவை வீட்டினர் பயன்படுத்துகிறார்கள். அதாவது அவர் கையிலும் கழுத்திலும் அணிந்துள்ள நகைகளின் மதிப்பு சுமார் ஒன்றே கால் கோடியை விட அதிகம் என்று அர்த்தம்.
-
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications