"ஆட்டுக்குட்டியும் அறிவாலயமும்".. திமுக ஒன்று நினைக்க, திருப்பி போட்டு அசரடித்த பாஜக.. அடடே அண்ணாமலை
ஆட்டுக்குட்டி என்ற விமர்சனத்துக்கு அண்ணாமலை நச்சென பதிலடி தந்துள்ளார்
சென்னை: திமுகவின் தன்மீதான தொடர் கேலி - கிண்டல்களுக்கு நறுக்கென ஒரு பதிலடி தந்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.. என்ன நடந்தது?
விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ளது.. இந்த தேர்தலின் வெற்றிக்காக இப்போதே தமிழக பாஜக தயாராகி வருகிறது. நகர்ப்புற தேர்தல் தந்த உற்சாக முடிவையடுத்து, தீவிரமான களப்பணியை கையில் எடுத்துள்ளதுடன், அடிமட்டத்தையும் பலப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.
மற்றொரு புறம் திமுகவை டேமேஜ் செய்து, அக்கட்சி மீதான புகார்களை மக்களிடம் கொண்டு செல்கிறது.. அதாவது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தபோதிலும்கூட, பாஜகதான் முக்கிய எதிர்க்கட்சி போல செயலாற்றி கொண்டிருக்கிறது..

டரியல் ப்ளான்
போதாக்குறைக்கு திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டங்களையும் அறிவித்து, அதை நடத்தியும் வருகிறது.. சரியான பதிலடிகளையும், தர்க்க ரீதியான வாதங்களையும், புள்ளிவிவரங்களுடன் கூடிய தரவுகளை அமைச்சர்களும், திமுக நிர்வாகிகளும் அவ்வப்போது அளித்து வந்தபோதிலும்கூட, அடிக்கடி "ஆட்டுக்குட்டி"யை வைத்து அண்ணாமலையை விமர்சிக்க திமுகவின் அடிமட்டத்தில் சிலர் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆட்டுக்குட்டி
இதற்கு காரணம், அன்று ஐபிஎஸ் அதிகாரி பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அண்ணாமலை, தன்னுடைய சொந்த கிராமத்தில் ஆடுகளை வளர்த்து வந்தார்... அதனாலேயே அவரை ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்றும் கிண்டல் செய்து வருகிறார்கள்.. ஆனால், தன் மீதான விமர்சனங்களையும் அண்ணாமலை தக்க பதிலடி தந்து முறியடித்து கொண்டிருக்கிறார்.. பதவியை துறந்துவிட்டு, ஆட்டுக்குட்டியை ஏந்திய ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் துணிச்சலை அன்று தமிழக பாஜகவே வியந்து பார்த்தது..

ரிப்பீட்டு
இவர், மாநில தலைமை பொறுப்பை ஏற்ற சமயம், தற்சார்பு விவசாயம், இயற்கை வேளாண்மை, ஆட்டுக்குட்டி வளர்ப்பு எல்லாம் இனி அவ்வளவுதானா என்று ஒருமுறை செய்தியாளர்கள் இவரிடம் கேட்டனர்.. அதற்கு, அதையும் பார்ப்பேன் இதையும் பார்ப்பேன் என்று துணிந்து பதில் சொன்னார் அண்ணாமலை. அதுமட்டுமல்ல, தனக்கு கட்சியினர் ஆட்டுக்குட்டியை பரிசளித்தபோது, ஆஸ்கர் விருது பெற்றதுபோல மகிழ்ந்தேன் என்று அண்ணாமலை பூரித்து சொல்லியிருந்தார்..

ஆடும் பரிசும்
ஆனால், அதற்கு பிறகும் ஆட்டுக்குட்டியை வைத்து அண்ணாமலையை மீண்டும் திமுகவில் சிலர் சீண்ட போவதாக தகவல்கள் வந்தன.. அதற்கும் அண்ணாமலை ரெடியாகவே இருந்தார்.. குறிப்பாக, அண்ணாமலை பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், சால்வை, மாலைக்கு பதிலாக ஆட்டுக்குட்டியை பரிசளிக்க பாஜகவினர் முடிவு செய்திருப்பதாகவும், இப்படி தனக்கு பரிசாக கிடைக்கும் ஆட்டுக் குட்டிகளை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க, அண்ணாமலை முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வந்தன..

ஆடு + ஆட்டுக்குட்டி
அதாவது, தன்மீதான விமர்சனத்தை, மனமுவந்து எதிர்கொண்டு, அதை திமுக பக்கமே திருப்பிவிடும் புது டெக்னிக்கைதான் அண்ணாமலை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், ஒரு பிரபல டிவி சேனலுக்கு அண்ணாமலை ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்.. அதில், "ஆட்டுக்குட்டி அண்ணாமலை" என்று அழைப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது..

சம்மட்டி அடி
அதற்கு அண்ணாமலை, "யாராக இருந்தாலும், ஊழல்வாதி, பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார், முதுகில் குத்துபவர் என்ற பெயர்தான் பெறக்கூடாது. ஆடு என்பது விவசாயம் தானே அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை" என்று நறுக்கென பதிலடி தந்துள்ளார்.. தன்மீதான விமர்சனங்களை அண்ணாமலை இதுபோன்று அணுகும்போக்குதான், பாஜகவினருக்கு ஆச்சரியத்தை தந்து கொண்டேயிருக்கிறதாம்..!!
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications