Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக பாஜக இப்படி ஆயிடுச்சே? அத்தனை வாட்டி மோடி வந்தாரே? அஸ்திவாரம் ஆடுதோ? நாளை சென்னையில் புயலுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவில் பரபரப்பும், சலசலப்பும் தொடர்ந்து நிலவி கொண்டிருக்கிறது.. நாளைய தினம் என்ன நடக்க போகிறது?

தமிழகத்தை பொறுத்தவரை, திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தே ஒவ்வொருமுறையும் தேர்தலை சந்தித்து வந்தது தமிழக பாஜக.. ஆனால் இந்த முறை துணிச்சலுடன், தனித்தே போட்டியிட்டு, ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளுக்கும் மலைப்பை தந்திருந்தது.

Narendra Modi Tamil Nadu Chennai TN Leader Annamalai BJP Vote Bank

தங்களை முழுமையாக நம்பிய கட்சிகளை இணைத்து கூட்டணியிட்டு, களம் கண்டது. .. அதேசமயம், தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு இணையான பாஜக வேட்பாளர்களையும் இறக்கியது. இதனால் போட்டியிட்ட பல தொகுதிகளில், திமுக, அதிமுகவுக்கு இணையான நட்சத்திர வேட்பாளர்களை களமிறக்கியது.

பிரபலங்கள்: மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், மாநில தலைவர் அண்ணாமலை, ராம.சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் போன்ற சீனியர்கள் தங்கள் மொத்த செல்வாக்கையும் இந்த தேர்தலில் கொட்டினார்கள். ஆனால், பாஜக மொத்த இடத்திலும் மண்ணை கவ்வியிருக்கிறது.. போட்டியிட்ட எங்கியுமே பாஜக வெற்றிபெறவில்லை..

அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜகவை 40க்கு பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார் - அதற்கெல்லாம் அவருக்கு தண்டனை கிடைத்தால்தான் திருந்துவார் என்று எஸ்வி சேகர் முதல் பாஜக ஆதரவாளர்கள் ஆதங்கத்தை கொட்டினார்கள்.

13 இடங்களில் டெபாசிட் போய்விட்டது, ஒரு ஓட்டில் தோற்றாலும் தோல்வி தானே? பாஜக 14 சதவிகிதம் வாக்கு என்பது வளர்ச்சியில்லை.. இந்த 14 சதவிகிதம் என்பதும், கூட்டணியால் கிடைத்த வாக்குதான் என்று தோல்வியை ஏற்க முடியாமல் பாஜக ஆதரவாளர்களே சீறினார்கள்.

முறைகேடுகள்: தோல்வி ஒருபக்கம், கட்சியினரின் அதிருப்தி மறுபக்கம் என தமிழக பாஜக கையை பிசைந்து நிற்பதாக சொல்கிறார்கள்.. கூட்டணி பலமின்மை, தேர்தலின்போது சில தொகுதிகளில் தேர்தல் செலவினத்தில் நடந்த முறைகேடுகள் போன்றவைகள் எல்லாமே, பாஜகவின் சறுக்கல்களுக்கான முக்கிய காரணங்களாக சொல்லப்பட்டு வருகின்றன.

ஆனால், அதைவிட முக்கியமான அதிர்ச்சி என்னவென்றால், முதல் முறை மத்திய பாஜக ஆட்சிக்கு வந்தபோது, தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை இருந்தது. ஆனாலும் அப்போது பாஜக பெற்ற வாக்கு சதவீதத்தைவிட, இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளதாம்..

மோடி அலை: இத்தனைக்கும் வேறு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை பிரதமர் மோடி தொடர்ந்து தமிழகத்துக்கு வருகை தந்துகொண்டேயிருந்தார்.. எப்போதும் இல்லா அளவுக்கு "ரோடு ஷோ" தமிழகத்தில் நடத்தப்பட்டது.. அப்படியிருந்தும் பாஜகவின் வாக்கு வங்கியில் ஓட்டை விழுந்துள்ளது. எனவே, இதற்கான காரணங்களை டெல்லி மேலிடம் எதிர்பார்த்து காத்திருக்கிறதாம்.

இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழக பாஜக மையக்குழு கூட்டம் நாளை காலை கமலாலயத்தில் கூடுகிறது... மாநில தலைவர் அண்ணாமலையின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தல், எல்.முருகன், பொன்.கேசவ விநாயகம், ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் போன்ற மையக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பரபரப்பு: அநேகமாக நாளை நடக்க போகும் கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கான காரணங்கள் பற்றியும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்படும் என்றே தெரிகிறது. அப்போது அவரவர் தரப்பிலிருந்து, தொகுதியில் நிலவிய சில புகார்களையும் சொல்ல தயாராக இருக்கிறார்களாம்.

இதற்கு பிறகே, தமிழகத்தில் வாக்கு வங்கி சதவீதம் குறைந்தது ஏன் என்பது குறித்த விளக்கத்தையும் டெல்லியிடம் எடுத்துரைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ரிசல்ட் வந்து இத்தனை நாள் கடந்தும், தமிழக பாஜகவில் இன்னமும் பரபரப்பும், அனலும் அடித்து கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+