Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவில் ஸ்டாலினுக்கு போன "பாசிட்டிவ்" மெசேஜ்.. திமுக குஷி.. அதுவிடுங்க, பாஜக "நிமிரும்" 7 தொகுதி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய தினம் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ள நிலையில், தலைவர்களின் அனல் பிரச்சாரம் தமிழகமெங்கும் வீசிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஒரு பிரத்யேகமான தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

தென்மாவட்டங்களில் காலூன்றுவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்திலும் இந்த முறை வாக்கு வங்கியையும் கணிசமாக உயர்த்திவிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதனால்தான் எப்போதும் இல்லாத அளவுக்கு, பிரதமர் மோடி இந்த 4 மாதங்களில் 8 முறை இங்கே வந்து போயிருக்கிறார்..

Has CM MK Stalin received a positive message and Are these 7 constituencies favorable to Tamil Nadu BJP

அதுமட்டுமல்ல, தமிழக பாஜக சார்பில் போட்டியிடும் பிரமுகர்கள் அனைவருமே பிரபலமானவர்கள் என்பதால், தங்களது வெற்றியை நிரூபிக்க வேண்டிய அவசியத்துக்கும், கட்டாயத்துக்கும், நெருக்கடிக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.. எனவே, திமுகவை குறி வைத்தே, தன்னுடைய தேர்தல் வியூகங்களையும் பாஜக முன்னெடுத்து வருகிறது.

நீலகிரி: இப்படிப்பட்ட சூழலில், கடந்த வாரம் நமக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதாவது, பாஜகவில் கோவையில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நீலகிரியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் எல். முருகன், தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சவுந்தராஜன், நெல்லையில் போட்டியிடும் பாஜக சீனியர் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் போட்டியிடும் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வெற்றிக்காக சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாம் பாஜக மேலிடம்.

இந்த தகவலை மோப்பம் பிடித்த திமுகவும் தீயாய் இறங்கி வேலை பார்க்க துவங்கிவிட்டதாம். இந்நிலையில்,இன்னொரு பிரத்யேகமான செய்தி நமக்கு கிடைத்துள்ளது.

பிரச்சாரம்: இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வு பெறும் நிலையில், நேற்றிரவு தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைத்து அமைச்சர்களையும், மா.செ.க்களையும் தொடர்புகொண்டு இறுதிக்கட்ட நிலவரத்தை விசாரித்திருக்கிறார். இதற்கு முன்பாக தமிழக உளவுத்துறையிடமிருந்து ஒரு ரிப்போர்ட் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் சொல்லப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் அமைச்சர்களிடமும் மா.செ.க்களிடமும் ஆலோசித்துள்ளார் ஸ்டாலின்.

பாஜகவின் அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன், கறுப்பு முருகானந்தம், ராமலிங்கம், சௌமியா அன்புமணி, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் போட்டியிடும் தொகுகளான, கோவை, நீலகிரி, நெல்லை, தஞ்சை, நாமக்கல், தர்மபுரி, ராமநாதபுரம், தேனி ஆகிய தொகுதிகளின் கடைசிக்கட்ட நிலவரம் தற்போது எப்படி இருக்கிறது என அதிக நேரம் கேட்டறிந்தாராம் முதல்வர் ஸ்டாலின்.

பொறுப்பு அமைச்சர்: இந்த தொகுதிகளில் திமுக (கூட்டணி கட்சியும் இதில் அடங்கும்) தான் ஜெயிக்கும் என்று பொறுப்பு அமைச்சர்களும் உறுதி தந்திருக்கிறார்களாம். ஆனால், மேற்கு மண்டலத்தில் ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும்தான் சற்று இழுபறி என்று சொல்லப்பட்டதாம்.

அதேபோல, கோவை மற்றும் தேனி மாவட்ட பொறுப்பு அமைச்சர்களிடம், கடைசி 3 நாட்களில் கூடுதல் கவனம் போடுங்கள் என்று வலியுறுத்தியிருக்கிறார் ஸ்டாலின். இதைத்தவிர, தேனி மற்றும் மதுரை தொகுதிகளுக்கு பொறுப்பாளரான அமைச்சர் மூர்த்தியிடம், தேனிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மதுரைக்கும் தர வேண்டும் என்றும், இந்த முறை மதுரை ஜெயித்தே ஆக வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+