ச்சே.. மிஸ் பண்ணிட்டாரே எடப்பாடி.. தமிழகத்தில் "சிக்கல்".. ஆண்டவரின் திடீர் என்ட்ரி.. திமுக ஸ்மார்ட்
சென்னை: தேவையில்லாமல் ஒரு நல்ல சான்ஸை, எடப்பாடி பழனிசாமி மிஸ் செய்துவிட்டாரோ? என்று ஆதங்கப்படுகிறார்கள் அதிமுகவின் சில நிர்வாகிகள்.. அப்படி என்ன நடந்தது?
மழை வெள்ள நிவாரணம் குறித்து செய்தியாளர்களிடம் 3 நாட்களுக்கு முன்பு கமல் பேசினார். அப்போது கூறும்போது, இதற்கு முன்பு வந்ததெல்லாம் சிற்றிடர், இப்போது வந்துள்ளது பேரிடர்.. அரசை பிறகு விமர்சிக்கலாம், மக்களுக்கு உதவுவதே இப்போதைக்கு முக்கியம் என்று கூறியிருந்தார்.

கமலின் இந்த கருத்துக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி தந்திருந்தார்.. "கமல்ஹாசனை தான் ஒரு அரசியல்வாதியாக கருதவில்லை, பச்சோந்தியை விட விரைவாக நிறம் மாறுபவர்" என்று சாடியிருந்தார்.
கமல் பதில்: இதற்கு மநீம பொதுச் செயலாளர் அருணாச்சலம் பதிலடி தந்திருந்தார். "சென்னை புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, எங்கோ ஓடிப்போய் பதுங்கிக் கொண்ட எதிர்க்கட்சி தலைவர், மக்கள் நலனுக்காக களத்தில் நிற்கும்கமல்ஹாசனை பச்சோந்தி என்று விமர்சித்திருப்பது கேலிக்கூத்தானது. மநீம தொண்டர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் களப்பணியாற்றி வருகின்றனர்.
2015ல் சென்னையே வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தபோது, அப்போது ஆண்ட முதல்வர் எங்கே இருக்கிறார்? இப்போதும் அவர்கள் யாரும் களத்தில் இல்லை, கூவத்தூரில் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, தனது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை மக்களுக்காகச் செலவழித்துக் கொண்டிருக்கும் தலைவரை பற்றி விமர்சிக்கத் தகுதி உண்டா? இனியும் ஏதாவது பேசினால், எடப்பாடி பழனிசாமி வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றாமல் விடமாட்டோம்" என்பது உட்பட கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஹாட் டாபிக்: இந்த விஷயம்தான் தற்போது அரசியலில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. புயல் அடித்து 2 நாள் கழித்து, பெருங்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, நிவாரண பொருள்களை வழங்கியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அதற்கு பிறகு அவரை சென்னையில் பார்க்க முடியவில்லை என்று விமர்சனங்கள் கிளம்பின.
"இதற்கு முன்பு சென்னையில் வெள்ளம் வந்தபோது, அனைத்துக்கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி என பாரபட்சம் பாராமல் மக்களை மீட்கும் பணியிலும், அவர்களுக்கு தேவையான பணிகளை செய்வதிலும் அக்கறை செலுத்தினார்கள்.. ஆனால், ஒரே ஒரு நாள் மட்டுமே, வேட்டியை மடித்துக் கொண்டு தண்ணீரில் இறங்கிய சென்று நிவாரண பணிகள் எடப்பாடி பழனிசாமி வழங்கிவிட்டு, உடனே ஃபிளைட் பிடித்து கொண்டு சேலத்துக்கே சென்றுவிட்டார் என்று ஓபிஎஸ் தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
கமல்ஹாசன்: உண்மையிலேயே எடப்பாடி பழனிசாமி சேலத்துக்கு சென்றாரா? அதற்கு வேறு ஏதாவது முக்கிய காரணமா? என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், கமல் விஷயத்தை தேவையில்லாமல் தொட்டுவிட்டார் என்கிறார்கள்.
ஒரு எதிர்க்கட்சி தலைவர், ஆளும் கட்சியை விமர்சிக்கலாம், அல்லது மத்திய அரசை விமர்சிக்கலாம். அதைவிட்டுவிட்டு, சம்பந்தமேயில்லாமல் கமலை ஏன் விமர்சிக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பிகிறார்கள்.
கிருஷ்ணசாமி: இதுவரை அதிமுகவுக்குள் எந்த கட்சியும் கூட்டணிக்குள் வரவில்லை.. சொந்த கூட்டணியில் இதுவரை இடம்பெற்ற, ஏசி சண்முகம், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜிகே வாசன், ஜான் பாண்டியன் என ஒருத்தருமே அதிமுகவுக்கான ஆதரவை இதுவரை உறுதி செய்யவில்லை. அதனால்தான், மநீம கமல்ஹாசனை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியை, அதிமுக மேலிடம் மேற்கொண்டதாகவும், ஆனால், சாதகமான பதில் கமலிடமிருந்து வராததால், சீமானுக்கு அடுத்த குறி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன.
தற்போது திமுகவுடன் மநீம கூட்டணி வைப்பது கிட்டத்தட்ட முடிவாகி உள்ளது. அதிலும் தென்சென்னையை மய்யத்துக்கு ஒதுக்க போவதாகவும் தகவல்கள் வலம்வருகின்றன.
சைலண்ட் உத்தரவு: இப்படிப்பட்ட சூழலில்தான், எடப்பாடி பழனிசாமி, புயல் பாதிப்பு குறித்து கமலை சீண்டவும், பதிலுக்கு எடப்பாடி பழனிசாமியை அட்டாக் செய்து அறிக்கை விடும்படி, "சைலண்ட் உத்தரவு" ஒன்று 'மேலிடத்திலிருந்து' பிறப்பிக்கப்பட்டதாம்.. ஒருபக்கம் அதிமுகவை விமர்சத்து + மறுபக்கம் நிவாரண பணிகளையும் துவங்கியிருக்கிறது மக்கள் நீதி மய்யம்..
புயல் மற்றும் பெருவெள்ளம் சூழ்ந்த நிலையில், 4 மாவட்ட மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்போது, அதிலும் ஆளும்கட்சி மீது ஆங்காங்கே அதிருப்திகளும் வெடித்து வரும்போது, இந்த வாய்ப்பை எடப்பாடி பழனிசாமி தவறவிட்டுவிட்டாரே என்று அதிமுகவின் தொண்டர்களே ஆதங்கப்படுகிறார்களாம்.
நிவாரண பணிகளில் முழுமையாக இறங்கி, ளஅதிமுகவுக்கான ஆதரவை 4 மாவட்டத்திலும் அசால்ட்டாக அள்ளுவதுடன், திமுக அரசையும் டேமேஜ் செய்யும் வாய்ப்பை நழுவவிட்டுவிட்டாரே? என்று அங்கலாய்க்கிறார்களாம் தொண்டர்கள்.
கமல் படுதீவிரம்: எது எப்படியோ, தேவையில்லாமல் கமலை சீண்டி, இந்த விஷயத்திலும் அதிமுக மூக்குடைப்பட்டுவிட்டதே என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications