மய்யம் இல்லைனு சொல்லல, இருந்தா நல்லா இருக்கும்னுதான்! மாயமான மநீம! கமல் அரசியலில் ஏகப்பட்ட ட்விஸ்ட்
சென்னை: நேற்று அரசியலுக்கு வந்த விஜய் தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி இருக்கிறார். அவரை சுற்றியே அரசியல் வலைகள் பின்னப்பட்டு வருகிறது. திமுக- அதிமுகம் எதிர்ப்பு, ஆதரவு நிலை மாறி, விஜயும் ஒரு ஃபேக்டராக மாறி இருக்கிறார். ஆனால் திரைத்துறையில் உச்சம் தொட்ட கமலஹாசன் தமிழ்நாடு அரசியலில் குறிப்பாக 2026 தேர்தலில் ஒரு புள்ளியாக கூட இல்லை. என்ன ஆனது மக்கள் நீதி மய்யம் என்ற கேள்வி அந்த கட்சி தொண்டர்கள் இடையே இருந்திருக்கிறது.
திரைப்படங்களில் பொதுவாக ஹீரோக்களுக்கு எப்போதுமே மாஸ் என்ட்ரி இருக்கும் அப்படித்தான் மிகவும் மாஸாக அரசியலுக்கு வந்தார் நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமலஹாசன்.
பொதுவாக திரைப்படங்கள் எப்போதும் ஒரு ஃபார்முலாவை கொண்டிருக்கும் ஹீரோவுக்கு மாஸ் என்ட்ரி, சண்டை காட்சிகள், டூயட், சென்டிமென்ட் கடைசியில் க்ளைமேக்ஸ். அந்த கிளைமாக்ஸில் ஹீரோ வெற்றி பெறுவார். இதுதான் தமிழ் படங்களின் பார்முலா.

கமல்ஹாசன் அரசியல்
ஆனால் கமலஹாசன் படங்களில், படம் தொடங்கி கிளைமாக்ஸ் வரை எப்படி செல்லும் என யாராலும் கணிக்க முடியாது. அவரது அரசியல் பயணமும் அப்படித்தான் இருந்திருக்கிறது. அவரது திரைப்படங்களைப் போலவே கமலஹாசனின் அரசியல் பயணமும் பல திரைக்கதை ட்விஸ்ட்களுடன் அமைந்திருக்கிறது. அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவிப்பில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் வரை மக்கள் நீதி மையம் சந்தித்த ட்விஸ்ட்கள் ஏராளம். மாற்று அரசியல், மய்ய அரசியல், பழைய அரசியல் வேண்டாம் என்ற வசனங்களுடன் மக்கள் முன் மேடையில் தோன்றிய கமலஹாசனின் பிரதான எதிர்ப்பு திமுகவை நோக்கி தான் இருந்தது.
மக்கள் நீதி மய்யம்
குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவர் விமர்சித்ததை தற்போது பேசினால் அது என்ன விதமான எதிர்வினைகளை ஆற்றும் என்பது அனைவருக்கும் தெரியும். கமலஹாசனின் திரைப்படங்களைப் போலவே அவரது அரசியல் வசனங்களும் கதாபாத்திரங்களும் மாறத் தொடங்கியது. கமலஹாசனின் அரசியல் பயணம் அதைத்தான் உறுதி செய்து இருக்கிறது. அதிமுக, திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் என பேசிய கமலஹாசன் காங்கிரஸ் என்ற கதவின் வழியாக திமுக எனும் மாளிகைக்குள் நுழைந்து இருக்கிறார்.
கமல் மாநிலங்களவை
அதன் மூலம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியின் பெற்றிருக்கிறார். இதனை அரசியல் முதிர்ச்சி என்றும், அரசியல் சமரசம் என்றும் அவரது ஆதரவாளர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற்ற நாளில் இருந்து கமலஹாசனின் அரசியல் வாழ்க்கை ஒரு புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்திருக்கிறது. கோவையில் போட்டியிட்டு தோல்வியடைந்ததன் மூலம் மக்கள் ஆதரவை இழந்த கமலஹாசன் நேரடியாக நாடாளுமன்றம் சென்றிருக்கிறார்.
மாற்று அரசியல் தோல்வி
மாற்று அரசியல் பேசிய தலைவர், மைய அரசியலுக்குள் சென்று விட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் குமுறுவதை கேட்க முடிகிறது. முன்னரே குறிப்பிட்டது போல நேற்று கட்சி ஆரம்பித்த தமிழக வெற்றி கழகத்தினர், கள அரசியலிலும் சமூக வலைதள அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் கட்சி ஆரம்பித்தபோது கமலஹாசன் உடன் பயணித்தவர்கள் திமுகவில் இணைந்து நிலையில் கட்சியை கிட்டத்தட்ட கலைத்து விட்டது போலவே, கமலஹாசன் திமுகவில் இணைந்திருக்கிறார்.
மநீம கட்சி மாயம்
முதல்வர் கனவோடு வந்த கமலஹாசன் தனது கனவையே நையாண்டியாக மாற்றி விட்டதாக சொல்லப்படுகிறது. கமலஹாசனின் இந்த அமைதி கட்சி தொண்டர்களின் மனநிலையை மிக அதிகமாக பாதித்துள்ளது என்று சொல்கின்றனர். கமல் சரியான நேரத்தில் பெரிய முடிவெடுப்பார் என்ற நம்பிக்கை ஒரு சிலர் மனதில் இருந்தாலும், 2026 தேர்தலில் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி அவர்கள் மனதுக்குள் எழுந்திருக்கிறது.
தமிழக அரசியல் ட்விஸ்ட்
தமிழக அரசியலில் உடைபட்ட பல கட்சிகள் திமுகவில் இணைந்து இருக்கிறது. உதாரணத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியை சொல்லலாம். ஜவாஹிருல்லாவுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக வெளியேறிய தமீமுன் அன்சாரி தற்போது திமுக ஆதரவாளராக மாறி இருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தனியரசு, நடிகர் கருணாஸ் ஆகியோர் தற்போது திமுகவில் இணைந்திருக்கிறார்கள். திமுகவை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட மதிமுக திமுக கூட்டணியில் இணைந்து இருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தல்
2026ல் திமுக சின்னத்திலேயே அவர்கள் போட்டியிடலாம். அப்படி பத்தோடு பதினொன்றாக மக்கள் நீதி மய்யமும் ஆகிவிட்டதாகவே சொல்கின்றனர் கமலின் ஆரம்ப கால அரசியல் பயணத்தில் உடன் சென்றவர்கள். 2026 தேர்தலில் கமல் மீண்டும் போட்டியிடலாம் அல்லது அவர் கைகாட்டும் ஒரு சிலருக்கு சீட்டுகள் கிடைக்கலாம். ஆனால் மக்களவைத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் கைக்காசை செலவழித்து தற்போது அரசியல் எதிர்காலம் இன்றி தவித்து வருபவர்கள் மய்யத்தின் பக்கம் நிற்கலாமா அல்லது வழக்கம்போல் திமுக, அதிமுகவிலேயே இணைந்து விடலாமா என யோசித்து வருவதாக சொல்கின்றனர் கமலஹாசனின் ஆதரவாளர்கள்.
-
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
லோக்கல் பாலிடிக்ஸ்..கண் வைத்த கனிமொழி! க்ரீன் சிக்னல் கொடுக்காத ’உடன்பிறப்பு’..’சிலருக்கு’ சிக்கலாமே -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி முதல் கல்வி கடன் ரத்து வரை! 2021ல் திமுக, அதிமுக கொடுத்த வாக்குறுதிகள்! -
திமுகவிடம் 10 தொகுதிக்கான பட்டியலை கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
வெயிட்டாக எதிர்பார்க்கும் காங்., அசைந்து கொடுக்குமா அறிவாலயம்? லிஸ்டோடு தவிக்கும் கதர் கட்சியினர்!












Click it and Unblock the Notifications