"அது" எதுக்கு.. பக்கத்துல அந்த பொண்ணு யாரு.. காவி உடையில் அந்தரத்தில் பறந்தது அவரா?.. என்னடா நடக்குது
காவி உடையுடன் அந்தரத்தில் சித்தர் பறக்கும் வீடியோ ஒன்று ஷேர் ஆகி வருகிறது
சென்னை: காவி உடையுடன், பாம்பன் சித்தர் மீண்டும் வந்துவிட்டதாக சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவி வருகின்றன.. அத்துடன் ஒரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
சமீப காலமாகவே மூடநம்பிக்கைகள் அதிகரித்து வருகின்றன... இது தொடர்பான குற்றங்களும் பெருகி வருகின்றன.. அதற்கு சோஷியல் மீடியா என்ற களத்தை சரியாக பயன்படுத்தி காசு பார்த்து வருகிறது ஒரு கூட்டம்.
அளவுக்கு அதிகமான மூடநம்பிக்கைகள் சிதறி கிடப்பதாலும், பெரும்பாலான கிராம மக்களுக்கு படிப்பறிவு குறைவு என்பதாலும், இத்தகைய குற்றங்கள் சர்வசாதாரணமாகிவிட்டது.

நயவஞ்சகம்
மக்களின் மனப் பிரச்சனைகளை, பயம், கலக்கம் போன்றவற்றுடன் மூட நம்பிக்கைகளையே, மூலதனமாக்கி வியாபாரம் செய்து வருவதும் அதிகமாகி விட்டது.. ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் நிச்சயம் இருக்கத்தானே செய்வான்? இதோ கண்ணெதிரே ஒரு நயவஞ்சகம் நடந்துள்ளது.. எப்படியெல்லாம் மனித மனங்களை, மாய்ஜாலத்தால் வீழ்த்துகிறார்கள் என்பதை ஒரு வீடியோ நமக்கு உணர்த்துகிறது.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

மாயாஜாலம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதிக்கு அருகே பிரப்பன்வலசை என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன.. இங்கு நிறைய குடும்பங்கள் வசித்து வருகின்றன... புயல், சூறாவளி, மழை போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தால், இந்த பகுதி நிறைய பாதிப்புக்கு உள்ளாகும்.. அதனால், புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், இங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்... இப்படிப்பட்ட சூழலில், கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி இரவு 10 மணிக்குதான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

காவி டிரஸ்
அந்த முகாமிற்கு வெளியே திடீரென ஒரு சத்தம் கேட்டது.. யாரோ ஒரு நபர் விசித்திரமான குரலில் கத்துவது போல இருந்தது.. நைட் நேரத்தில் அப்படி ஒரு சத்தம் கேட்டதுமே, பலரும் பயந்துவிட்டனர்.. ஒரே ஒரு நபர் மட்டும், பயந்துகொண்டே தன்னுடைய வீட்டின் ஜன்னல் ஓரத்தில் இருந்து எட்டி பார்த்தார்.. அப்போது வெளியே இருந்த வாகனத்தின் மீது, ஒரு உருவம் பறந்து கொண்டிருந்தது.. அந்த உருவாம் காவி டிரஸ் அணிந்திருந்தது.. பார்ப்பதற்கு சித்தர் போலவே தோற்றம் கொண்டிருந்தது.. அந்த கண்கள் மிளிர்ந்து பயமூட்டியது.. அவர் வானத்திலிருந்து பறந்து வந்துள்ளதுபோல, அந்தரத்திலேயே தொங்கி கொண்டிருந்தார்.

பாம்பன் சித்தர்
ஜன்னல் வழியாக இதை பார்த்த நபருக்கு தூக்கி வாரிப்போட்டது.. ஜன்னல் ஓரத்தில் இருந்து இவர் கவனிப்பதை, காவி உடை நபர் பார்த்துவிட்டார்.. உடனே இந்த நபரையும் பயமுறுத்தியுள்ளார்... இதைப் பார்த்து மேலும் பீதியடைந்த ஜன்னல் நபர், உடனே செல்போன் எடுத்து, இந்த சம்பவம் முழுவதையும் வீடியோ எடுத்துவிட்டார்.. இந்த வீடியோதான், சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலருக்கும் புல்லரித்து விட்டது. ஆஹா பறக்கும் சித்தர், பாம்பன் சித்தர் வந்துவிட்டார் என கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

மாயமாலம்
ஆனால் நடந்த சம்பவமே வேறு.. இந்த வீடியோவே ஒரு பித்தலாட்டம்.. இந்த வீடியோவில் ஒரு பெண் இருக்கிறாராம்.. வீடியோவை உற்று பார்த்தபிறகுதான் பலருக்கு டவுட் கிளம்பி உள்ளது.. அதனால், இதன் உண்மைத்தன்மையை அறிய முயன்றுள்ளனர்.. தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்த வீடியோ குறித்து புட்டுபுட்டு வைத்துவிட்டார்கள்.. அந்த பெண் அங்கே நின்றுகொண்டிருப்பதைகூட கவனிக்காமல், வீடியோ எடிட்டர்கள் அவசர அவசரமாக இதை எடிட் செய்து, சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விட்டதும் தெரியவந்துள்ளது. அந்தரத்தில் பறக்கும் நபருக்கு கண்ணில் ஒளி தெரியும் வண்ணம், எடிட்டிங்கில் லைட்டிங் தந்துள்ளதும் தெரியவந்துள்ளது.. இந்த வீடியோ இணையத்தில் இன்னமும் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.

எலுமிச்சம் பழம்
ஒருமுறை திராவிடர் கழக தலைவர் வீரமணி வெளியிட்ட அறிக்கையைதான், மீண்டும் இங்கே நாம் நினைவுவர வேண்டி உள்ளது.. அந்த அறிக்கை இதுதான்: "புதுக்கோட்டையில் முத்துலட்சுமி என்ற பெண்ணின் வீட்டில் தொடர்ந்து உயிரிழப்பு.. அதனால், ஒரு சாமியாரிடம் குறி கேட்க சென்றார்... அந்த சாமியாரும், 10 ரூபாய் எலுமிச்சம் பழத்தைப் பறக்கவிட்டு புதையல் எடுத்துத் தருவதாக 81,000 ரூபாயைப் பறித்துச் சென்று விட்டார்.. மணி, முருகேசன், ராசு ஆகிய மூன்று போலிச் சாமியார்களைக் கைது செய்த காவலர்கள், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கி வீரமணி
அவர்களிடம் இருந்து 23 பித்தளை சிலைகள், ரூ.81,000 ரொக்கம், இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.. சாமியார் பேச்சை கேட்டு, முத்துலட்சுமி, ஆங்காங்கே கடன் வாங்கி ரூ.75,000 கொடுத்து புதையலை எடுக்க சொல்லி, பூசைச் செலவுக்கும் ரூ.6,000 தந்து ஏமாந்தார். அதாவது, "பக்தி, கடவுள், மதப் போர்வையில் இந்த மோசடிகளை காவி வேடமிட்ட பலரும் தந்திரக்காரர்களும் அதே விஞ்ஞான உத்திகளைக் கொண்டே மக்களை ஏமாற்றுவதற்கு மூலக் கருவியாகவும் பயன்படுத்துவது இன்னும் பல மடங்கு நம்மை வேதனையடையச் செய்கிறது,..

மந்திரமல்ல, தந்திரமே
அறிவியல் சிந்தனை தேவைப்படும் சமூகநலப் பிரச்சினையாகப் பார்க்க 'மந்திரமல்ல; தந்திரமே' என்று விளக்கிடும் நிகழ்ச்சிகளும் விளக்கவுரைகளும், விழிப்புணர்வுக் கூட்டங்களும் நடத்துவதே உடனடியான மனநல சிகிச்சையும், தீர்வும் ஆகும் என்று மூத்த தலைவர் கி.வீரமணி சொன்னது நினைவுகூரத்தக்கது... முத்துலட்சுமியிடம் எலுமிச்சம் பழம் பறந்துள்ளது, இங்கே மனிதரே பறந்துள்ளார்.. மோசடிகளின் ரூபங்கள் மாறுகிறதே தவிர, ஏமாறும் அப்பாவிகள், அப்படியேதான் இன்னமும் இருக்கிறார்கள்..!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications