வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
சென்னை: வாக்குப்பதிவு நேற்றைய தினம் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், வடசென்னை தொகுதியில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.. என்னன்னு பாருங்க
வட சென்னையில் திமுக சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, பாஜக சார்பில் பால்கனகராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதினி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வட சென்னை மக்களவை தொகுதி உருவானதிலிருந்து நடைபெற்ற தேர்தல்களில், திமுக 11 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 1 முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன.. இதனால் வட சென்னை திமுகவின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது.
இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக பால்கனகராஜ் களமிறங்கியிருக்கிறார்.. பால்கனகராஜுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மாநிலத்தலைவர் அண்ணாமலை, கூட்டணிக் கட்சியான தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாக்கு சேகரித்துவிட்டு போனார்கள்.
வடசென்னை: திமுக எம்.பி. இந்த வடசென்னைதொகுதிக்கு எதுவும் செய்யாமல் 5 ஆண்டுகளை வீணடித்து விட்டார், என்று திமுகவை குற்றஞ்சாட்டி வாக்குகளை சேகரித்து வந்தார் பால் கனகராஜ்.
இந்நிலையில், நேற்றைய தினம் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.. 39 மக்களவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்ட 68,321 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆங்காங்கே வாக்கு எந்திர கோளாறுகள் நடைபெற்றதைபோலவே, வடசென்னை தொகுதியிலும் இந்த பிரச்சனை எழுந்தது.. எம்பி கலாநிதி வீராசாமி தன்னுடைய குடும்பத்துடன் வாக்களிக்க சென்ற அண்ணாநகர் கந்தசாமி கல்லூரியிலும் இயந்திரங்கள் பழுதால், 45 நிமிடத்துக்கு பிறகே வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்குப்பதிவு: ஆரம்பத்தில் மந்தமான வாக்குப்பதிவு காணப்பட்ட நிலையில், நேரம் ஆகஆக, வாக்கு பதிவு அதிகரிக்க துவங்கியது.. அதாவது வழக்கமாக, வடசென்னையில் - 64.26 சதவீதம் மட்டுமே பதிவாகி வந்தநிலையில் நேற்று 69.26 சதவீதம் என 10 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் சார்பாக, பாஜக நிர்வாகி சதீஷ்குமார் என்பவர், வாக்குப்பதிவு முடிந்து, ஒருசில நிமிடங்களிலேயே வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, போஸ்டரையும் அடித்து வடசென்னை முழுக்க ஒட்டிவிட்டார்..
நன்றி: "வடசென்னை பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வழக்கறிஞர் பால் கனகராஜ் அவர்களுக்கு வாக்களித்த வள்ளல்களுக்கு நன்றி என்று எழுதப்பட்டிருந்தது.. பால்கனகராஜ், பிரதமர் மோடி, அண்ணாமலை உட்பட வடசென்னை பாஜக நிர்வாகிகளின் போட்டோக்கள் அந்த போஸ்டரில் பெரியதாக இடம்பெற்றுள்ளது.
அதாவது, நேற்று மாலை வாக்குப்பதிவு நிறைவடையும் முன்பேயே, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பாஜக வேட்பாளர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள், வடசென்னையில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications