விடிஞ்சா ரிசல்ட்.. டக்னு இப்படி கேட்டுடுச்சே இந்து முன்னணி! வெள்ளை அறிக்கை வெளியிட போகுதா திமுக அரசு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்து முன்னணி முக்கிய பிரச்சனையை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக, காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு, திமுக அரசை கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அந்த அறிக்கையில், "கடந்த ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி., இருந்த பொன் மாணிக்கவேல் நடவடிக்கையால், கடத்தப்பட்ட பல கடவுள் சிலைகள் மீட்கப்பட்டன. அந்த குற்றச் செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். வழக்குகள் நீதிமன்ற நிலுவையில் உள்ளன.

DMK Government MK Stalin Hindu Munnani Hindu Front protest

திமுக ஆட்சி: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது... மேலும், முறைகேடாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள், ஆட்சியாளர்களுக்கும் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சருக்கும் நெருக்கமாகினர். பிறகு, வழக்கு என்னவாயிருக்கும் என்பது குறித்து சொல்ல வேண்டியதில்லை.

போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல், தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட வேண்டிய தமிழகத்தின் சிலைகள், 2,000க்கும் மேல் உள்ளன என கூறி வருகிறார். ஆனால், அதை மீட்க ஹிந்து அறநிலையத் துறை உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

சிலை தடுப்பு பிரிவு: இதுவரை காணாமல் போன திருக்கோவில் சிலைகள் எவ்வளவு, அதற்காக சிலை தடுப்புப் பிரிவு போட்டுள்ள வழக்குகள் எத்தனை? மேலும் காணாமல் போன, பல ஆயிரம் கோடி மதிப்பிலான மரகத லிங்கம் போன்றவை குறித்து எடுத்த நடவடிக்கை என்ன? நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து நடத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கோவில் சிலை களவு போவதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதான நடவடிக்கை என்ன?

சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை காணாமல் போன வழக்கில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தேடுதல் வேட்டை தொடருவதாகச் சொல்லி விசாரணையை இழுத்தடித்தனர். இதேபோலத்தான் மற்ற வழக்குகளின் நிலையும்.

போராட்டம்: எனவே இதுவரை சிலை திருட்டு மற்றும் கடத்தல் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து தி.மு.க., அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் இந்த விஷயத்தில் திமுக அரசு மவுனம் சாதித்தால், பக்தர்கள் ஆதரவோடு போராட்டம் நடத்தப்படும்" என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் இந்து முன்னணி காடேஸ்வரா சுப்பிரமணியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+