Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குற்றவியல் துறை இயக்குநராக அசன் முகமது ஜின்னா நியமனம்.. முக்கிய உத்தரவு போட்ட முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் குற்றவியல்துறை இயக்குநராக அசன் முகமது ஜின்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவை, குற்றவியல்துறை இயக்குநராக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அசன் முகமது ஜின்னா 1977 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை கிராமத்தில் பிறந்தவர். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படித்தவர். 1996-ம் ஆண்டு முதல் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2001 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த கண்ணகி சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டபோது அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கண்ணகி சிலையை அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை பெற்றார்.

tamil nadu advocate

அதன் மூலம் கண்ணகி சிலை மெரினாவில் மீண்டும் அமையக் காரணமாக இருந்தவர் அசன் முகமது ஜின்னா. 2006-ம் ஆண்டு அந்த சிலை மெரினா கடற்கரையில் மீண்டும் நிறுவப்பட்டு திறப்புவிழா நடந்தபோது, அசன் முகமது ஜின்னாவின் சட்டப்போராட்ட பணியை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி பாராட்டிப் பேசினார்.

மேலும், எத்திராஜ் கல்லூரி மாணவி ஷரிகா ஷா ஈவ் டீசிங் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்ததோடு, ஈவ் டீசிங் தொடர்பாக முறையான சட்டம் உருவாகவும் காரணமாக இருந்தவர் வழக்கறிஞர் ஹசன் முகம்மது ஜின்னா.

2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா பணியாற்றினார். பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஆஜரானார். க்ஃப் போர்டு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) ஆகியவற்றுக்கு ஸ்டான்டிங் கவுன்சிலராக இருந்துள்ளார்.

திமுகவில் கருணாநிதியின் நம்பிக்கையை பெற்ற அசன் முகமது ஜின்னாவுக்கு பல முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார் ஜின்னா. ஸ்டாலின் முந்தைய திமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றிய போது அவரது வலது கரம் போல இருந்தார் அசன் முகமது ஜின்னா.

திமுக இளைஞர் அணியில் மாநில துணை செயலாளர் பதவியை வகித்த அசன் முகமது ஜின்னாவுக்கு 2011 சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், அதிமுகவின் பி.வளர்மதியிடம் தோல்வியை தழுவினார். தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் ஆன பிறகும் திமுக இளைஞரணியின் துணை செயலாளராக தொடர்ந்து வந்தார் அசன் முகமது ஜின்னா.

2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது, தமிழ்நாடு அரசு குற்றவழக்குகள் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+