ஜனவரி மாதம் தமிழ்நாடு வரும் மோடி.. அறிவிப்பு வந்ததும் ட்விட்டரில் ஆரம்பித்த கோ பேக் ட்ரெண்ட்!
சென்னை: ஒரு புறம் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளைத் திறந்து வைக்கப் பிரதமர் மோடி வரும் ஜனவரி 12ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், மறுபுறம் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் புதிதாக 13 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது.
அதில் தமிழ்நாட்டில் 11 இடங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைக் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு, அதற்காக 1,200 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.

மருத்துவக்கல்லூரிகள்
ராமநாதபுரம் , விருதுநகர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர் நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் அமையும் என அறிவிக்கப்பட்டது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தமிழக அரசுக்கு மத்திய அரசும் அனுமதி அளித்தது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இந்த மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசும் 40 சதவீதத்தை மாநில அரசும் அளிக்கும்.

திமுக அரசு
இந்த புதிய மருத்துவக் கல்லூரிகளை முடிந்த வரை சீக்கிரம் திறக்க திமுக அரசு தொடர்ந்து முயற்சி எடுத்தது. மேலும், இந்த 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 600 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. தமிழ்நாட்டில் தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் 24 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3,350 மருத்துவ இடங்கள் உள்ளன.

மொத்த இடங்கள்
இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் கூடுதலாக 1,408 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள் மூலம் மொத்தம் 9,100 மருத்துவ இடங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் அதிக அளவில் மருத்துவ இடங்கள் உள்ளன. இதனிடையே இந்த புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்கப் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12ஆம் தேதி சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்த பிரதமர் மோடி தமிழகம் வருவது இதுவே முதல்முறையாகும். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோ பேக் மோடி
இதற்கிடையே பிரதமர் மோடி வரும் ஜனவரி 12ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாகத் தகவல் வெளியானதுமே, மறுபுறம் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின் போது, பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் Go back Modi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாவது வழக்கம். குறிப்பாக திமுகவை சேர்ந்த தலைவர்களும் கூட இந்த Go back Modi என்ற ஹேஷடேக்கில் ட்வீட் செய்துள்ளனர்.

பாஜக சாடல்
இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்த பிறகு பிரதமர் மோடி முதல் முறையாகத் தமிழகம் வருவதாக அறிவிப்பு வெளியானதுமே தற்போது Go back Modi என்ற ஹேஷ்டேக் மீண்டும் டிரெண்டாக தொடங்கியுள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராகச் செயல்படுபவர்களே திட்டமிட்டு இந்த Go back Modi என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்வதாக பாஜக ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்,
-
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!











Click it and Unblock the Notifications