ஆறு முதல் வின்னர் வரை.. பொன்னிநதி பாக்கணுமே பாடலுக்கு படுஜோராக பொருந்தும் வடிவேல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொன்னியின் செல்வம் திரைப்படத்தில் வரும் பொன்னி நதி பாக்கணுமே பாடலின் வடிவேல் வெர்ஷன் கனகச்சிதமாக பொருந்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த வடிவேல், என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கவுண்டமணி, செந்திலுடன் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். பின்னர் தனித்து காமெடி செய்து மிக குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.

முதலில் வடிவேலுவின் முக பாவனைகளை வைத்தே மீம்ஸ் டெம்ப்ளேட்டுகள் கிரியேட் செய்யப்பட்டன. இவருக்கு பிறகுதான் விவேக், கவுண்டமணி, செந்தில், சந்தானம் ஆகியோரின் காமெடி டெம்ப்ளேட்டுகள் உருவாகின.

தலைவன் வடிவேல்

தலைவன் வடிவேல்

தலைவன் வடிவேல் இல்லாத டெம்ப்ளேட்டே இல்லை என சொல்லும் அளவுக்கு அவரது காமெடி மக்களை சென்றடைந்துவிட்டது. பாமர மக்களும் பார்த்து வயிறு குலுங்கும்படியாக இவரது காமெடி இருக்கும். இவரது காமெடிகள் எப்போது பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. அந்த வகையில் இவரது காமெடி காட்சிகளை மியூட் செய்துவிட்டு ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

பொன்னி நதி

பொன்னி நதி

அதாவது பொன்னியின் செல்வம் படத்தில் வரும் பொன்னி நதி பாக்கணுமே பாடலுக்கு இவரது காமெடி காட்சிகள் பொருந்தியுள்ளன. இது தொடர்பாக ஏற்கெனவே ஒன் இந்தியாவில் நாம் செய்தியை வெளியிட்டிருந்தோம். தற்போது சமூகவலைதளங்களில் இன்னொரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆறு படம்

ஆறு படம்

அந்த வீடியோவில் பொன்னி நதி பாக்கணுமே பாடல் ஓடுகிறது. அதில் ஆறு படத்தில் வரும் போலீஸ் காமெடி காட்சி சேர்க்கப்பட்டுள்ளது. ஆறு (சூர்யா) தெரியுமா என கேட்ட போலீஸ்காரர்களுக்கு வடிவேல் அழைத்து சென்று கூவம் ஆற்றை காண்பித்து இதுதான் சார் நீங்கள் கேட்ட ஆறு. எல்லாரும் தொப்பியை கழற்றி வைத்துவிட்டு டைவ் அடியுங்கள் என்பார்.

காற்றை போல

காற்றை போல

"கன்னிப் பெண்கள் காணனுமே" வரிகளுக்கு கூட்டமாக பெண்கள் நிற்பதுபோலும் அவர்களுக்கு வடிவேல் கைகாட்டுவது போலும் உள்ளது. "காற்றை போல" என்ற வரிகளுக்கு ஒரு கடைக்கு வடிவேல் காற்று போல் சுழன்று வருவார், அந்த காட்சி பொருத்தப்பட்டுள்ளது. "பொட்டல் கடந்து புழுதி கடந்து" என்ற வரிகளுக்கு வடிவேலும் அவரது குழு நடிகரும் ஒரு சாக்கடையைை தாண்டுவது போல் உள்ளது.

வீரம் வெளஞ்ச மண்ணு

வீரம் வெளஞ்ச மண்ணு

"வீரம் வெளஞ்ச மண்ணு" என்ற வரிகளுக்கு கைப்புள்ள சட்டைக் கையை மடித்து கொண்டு முறைக்கும் காட்சியும் உள்ளது. காணும் அழகினிலே என்ற வரிகளுக்கு வடிவேல் கண்ணாடியை பார்த்துக் கொண்டு ரசிக்கும் காட்சியும் உள்ளது. அழகினிலேலேலேலே என ராகம் பாடும் போது ஒரு படத்தில் வடிவேல் "ஹேஹேஹேஹே" என ராகம் பாடும் காட்சி உள்ளது.

வைரலாகும் வடிவேல் வெர்சன்

வைரலாகும் வடிவேல் வெர்சன்

"செக்க செகப்பி" என பாடல் வரிக்கு வடிவேல் பெண் மேடமணிந்து நீல நிற சேலை, ரவிக்கை அணிந்து கொண்டு தலை நிறைய பூ வைத்துக் கொண்டு கழுத்தில் அணிந்திருக்கும் செயினை வெட்கப்பட்டு கடிக்கும் காட்சி பொருந்தியுள்ளது. ஓ ஓ என ஹம்மிங்கிற்கு பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில் வடிவேல், பிரசாந்த் படகில் செல்லும் போது வடிவேல் ஹம் செய்வதுடன் பக்காவாக பொருந்தியுள்ளது. இப்படியாக வடிவேலுவின் வெர்சனாக இந்த பொன்னி நதி பாக்கணுமே பாடல் அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+