பான் கார்டு தொலைந்துவிட்டதா! வெறும் 50 ரூபாயில் புதுசா அப்ளை செய்யலாமே! அதுவும் ஈஸியா?
சென்னை: பான் கார்டு தொலைந்துவிட்டதா, வெறும் 50 ரூபாயில் ஒரிஜினலே வாங்கிடலாமே! எப்படி தெரியுமா?
ஜாதகத்தை பார்த்தால் உங்கள் குணாதிசயங்களை புட்டு புட்டு வைப்பது போல் பான் கார்டு இருந்தால் அதை வைத்து உங்கள் பெயரில் என்ன சொத்து இருக்கிறது, எவ்வளவு வருமானம், எந்த சொத்தை விற்றுள்ளீர்கள், எதை வாங்கியுள்ளீர்கள் என்பது குறித்து எல்லாமே வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு தெரிந்து விடும்.

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவும் பெரிய தொகையில் பொருட்களை வாங்கவும் பெரிய தொகை முதலீடு செய்யவும் பான் கார்டு அவசியமாகிறது. இவை இல்லையென்றால் பல பணிகள் முடங்கும் நிலை ஏற்படும். மற்ற அடையாள அட்டைகளை வைத்திருப்பது போலவே பான்கார்டு வைத்திருப்பது மிகவும் அவசியம்.
ஆனால் உங்கள் பான் கார்டு சேதமாகிவிட்டாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ அதை மாற்றுவதற்கும் திரும்ப பெறுவதற்கும் என்ன செய்ய வேண்டும், எவ்வளவு செலவாகும். எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது நமக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டால் கூட பான் கார்டை திரும்ப பெறலாம்.
வீட்டில் இருந்தபடியே பான் கார்டை அப்ளை செய்து விட்டு வீட்டிலேயே டெலிவரியும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 50 ரூபாய் செலவழித்தால் போதும். விண்ணப்பிக்கும் முறையும் எளிதுதான். இது போல் பான் கார்டு தொலைந்துவிட்டால் புதிய கார்டு வாங்க ரூ 100 முதல் ரூ 200 வரை செலவாகிறது. ஆனால் ஆன்லைனில் வெறும் 50 ரூபாய் போதும். ஒரிஜினல் பான் கார்டை பெறலாம்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது:
முதலில் நீங்கள் NSDLலின் https://nsdl.co.in என்ற வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும். அதில் Reprint Pan Card என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். உள்ளே பான் கார்டு எண், பிறந்த தேதி , கேப்சா கொடுத்தால் போதும். இதற்கு அடுத்து நீங்கள் விதிமுறை, நிபந்தனைகளைக் காண்பீர்கள். அவற்றை ஏற்றுக் கொண்டால் நீங்கள் சப்மிட் பட்டனை அழுத்தலாம்.
இதன் பிறகு புதிய பக்கம் வரும். அதில் பான் கார்டு குறித்து அனைத்து தகவல்களையும் சரிபார்க்க வேண்டும். அதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். உங்களின் மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். அதை டைப் செய்ய வேண்டும். பின்னர் கிரெடிட், டெபிட், யூபிஐ உள்ளிட்ட கட்டண தேர்வு முறையை கிளிக் செய்து அதன் மூலம் ரூ50 செலுத்த வேண்டும். பின்னர் நீங்கள் விண்ணப்பித்த 10 முதல் 15 நாட்களுக்குள் ஒரிஜினல் பான் கார்டு வீட்டுக்கே வரும்.












Click it and Unblock the Notifications