தந்தை அழகர்சாமியின் 100வது பிறந்தநாள்.. கைகளை கூப்பி உருகிய விஜயகாந்த்.. அச்சு அசல் "அவரோட" ஜெராக்ஸ்
சென்னை: நடிகர் விஜயகாந்தின் தந்தை அழகர்சாமியை பார்த்துள்ளீர்களா? அவருடைய புகைப்படத்தை பேரன் விஜயபிரபாகரன் வெளியிட்டுள்ளார்.
திரைத்துறையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் உச்சத்தில் இருந்த போது 1975 களில் ஈட்டி படத்தின் மூலம் அறிமுகமானார். மதுரையை சேர்ந்த விஜயகாந்த், இதுவரை தமிழ் படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ரஜினி, கமல் அசுர வேகத்தில் உயர்ந்திருந்த காலத்திலும் தனது அசாத்திய நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் விஜயகாந்த். இவர் நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் என்பதை அவருடன் பழகியவர்கள் கூறுவதன் மூலம் அறியலாம்.

சாப்பாடு
தனது வீட்டுக்கோ அலுவலகத்திற்கோ யார் வந்தாலும் அவர்களுக்கு சாப்பாடு போட்டுதான் அனுப்புவாராம். அது போல் வலது கை கொடுப்பது இடது கைக்கு கூட தெரியாமல் பார்த்துக் கொள்வாராம். இவர் நடிகர் சங்க தலைவராக இருந்த போது யாராலும் அடைக்க முடியாத நடிகர் சங்கத்து கடனை வெளிநாட்டில் கலை நிகழ்ச்சியை நடத்தி அடைத்தார்.

உச்சத்தில்
இவரது அழைப்பின் பேரில் உச்சத்தில் இருந்த ரஜினி, கமல் ஆகியோரும் அந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விஜயகாந்த் போலீஸ் உடை அணிந்து கொண்டு மிடுக்காக நடித்த படங்களை இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அவரது படங்களில் இந்திய தேசத்தை போற்றி பாதுகாப்பது குறித்த கதையம்சமே அதிகம் இருக்கும். கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, நரசிம்மா, வல்லரசு, வாஞ்சிநாதன், உளவுத்துறை, சேதுபதி ஐபிஎஸ், ஆனஸ்ட் ராஜ் உள்ளிட்ட படங்களில் காவல் துறை அதிகாரியாகவும் தேச நலன் காக்கவும் போராடுவது போன்ற கதை களத்தில் நடித்திருப்பார்.

குடும்ப பாங்கு
இந்த படங்கள் இல்லாமல் குடும்ப பாங்கான கதையான சின்னகவுண்டர், காவியத் தலைவர், கோயில் காளை, ஏழை ஜாதி, எங்க முதலாளி, என் ஆசை மச்சான், திருமூர்த்தி, கள்ளழகர், கண்ணுப்பட போகுதய்யா, சொக்கத் தங்கம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். திரையுலகில் கருப்பு வைரமாக மின்னிய விஜயகாந்த் அரசியலுக்கும் வந்தார்.

அரசியல்
கடந்த 2005 ஆம் ஆண்டு இவர் தேமுதிக எனும் கட்சியை தொடங்கினார். அந்த கட்சி அடுத்த ஆண்டே 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிகவின் விஜயகாந்த் எம்எல்ஏவானார். அதன்பிறகு 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 20 க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்வானார். கூட்டணியாக இருந்தாலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

உற்சாகம்
அப்போதே கூட்டணியிலிருந்து வெளியே வந்த விஜயகாந்தின் அரசியல் பயணம் தொடர்ந்து பின்னடைவையே சந்தித்தன. தற்போது விஜயகாந்திற்கு உடல்நிலை பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு காலில் இரு விரல்கள் நீக்கப்பட்டன. எனினும் கட்சியின் வளர்ச்சிக்காக நேரடியாக செயல்படாவிட்டாலும் தொண்டர்களை அவ்வப்போது சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

மகிழ்ச்சி
விஜயகாந்தை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா என பல தொண்டர்கள் ஏங்கி வருகிறார்கள். அவரது புகைப்படங்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியானாலோ இல்லை அவருடைய மகன் விஜயபிரபாகரனின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியானோ அன்று தேமுதிக தொண்டர்களுக்கு கொண்டாட்டம்தான். விஜயகாந்தை நேரிலேயே பார்த்து விட்ட மகிழ்ச்சியை அவர்கள் அடைவார்.

தந்தையின் 100 ஆவது பிறந்தநாள்
அந்த வகையில் தற்போது அவருடைய மகன் விஜய பிரபாகரன் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் விஜயகாந்தின் தந்தை அழகர்சாமியின் 100 ஆவது பிறந்தநாள் அண்மையில் கொண்டாடப்பட்டது. அதில் விஜயகாந்தின் மொத்த குடும்பமும் உள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விஜய பிரபாகரன் வெளியிட்டுள்ளார். விஜயகாந்த், பிரேமலதா, மகன்கள் ஆகியோர் அழகர்சாமியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ள புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. தனது தந்தை அழகர்சாமி, தாய் ஆண்டாள் ஆகியோரின் நினைவாக ஆண்டாள் அழகர் எனும் பொறியியல் கல்லூரியை விஜயகாந்த் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மதுரையில் ஏராளமான நிலங்களும், அரிசி ஆலைகளும் உள்ளதாக தெரிகிறது.
-
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications