காவாலா.. இப்படி ஒரு டான்ஸ் பார்த்திருக்க முடியாது.. தமன்னால்லாம் ஓரமா போங்க.. முரட்டு வெர்ஷன்
சென்னை: காவாலா பாடலுக்கு இதுவரை இப்படி ஒரு டான்ஸை பார்த்திருக்க முடியாது. ஜானி மாஸ்டரே அசந்து போகும் அளவுக்கு ஒருவரது முரட்டு வெர்ஷன் சமூகவலைதளங்களில் டிரென்டாகி வருகிறது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஜெயிலர், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படத்தில் தமன்னா, சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை. இந்தபடத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளன.

இதையடுத்து இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் காவாலா பாடல் அண்மையில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இதில் தமன்னாவின் சூப்பர் நடனமும், ரஜினிகாந்தின் ஸ்டைலும் மக்களை கவர்ந்துள்ளது. இந்த பாடலை இதுவரை 5 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்து பரவசமடைந்து வருகிறார்கள்.
மிகவும் துள்ளலான இசையில் இந்த பாடலை அருண் காமராஜ் எழுதியுள்ளார். நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் ஆவார். இந்த பாடல்தான் இப்போதைக்கு டிரென்ட் செட்டர் ஆகியுள்ளது. இந்த நிலையில் இந்த பாடலுக்கு சிம்ரன் நடனமாடினால் எப்படி இருக்கும் என்பதை செயற்கை நுண்ணறிவு மூலம் செய்து காட்டப்பட்டது. இதுவும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அது போல் காஜல் அகர்வால் ஆடுவது போலும் ஏஐ-யில் செய்யப்பட்டது. இந்த நிலையில் சின்னத்திரை பிரபலங்கள், ரீல்ஸ் செய்வோர் என இந்த பாடலை விட்டபாடில்லை. பாக்கியலட்சுமி சீரியலில் வரும் நடிகை சுசித்ராவும் அவருடைய மகளாக நடிக்கும் இனியாவும் இந்த பாடலுக்கு நடனமாடினார். ஒரு கையில் போனை பிடித்துக் கொண்டு கண்ணாடியை பார்த்துக் கொண்டே ஸ்டைலாக ஆடினார்.
#Kaavalaya முரட்டு வெர்சன் 😂😂@anirudhofficial @Nelsondilpkumar @tamannaahspeaks @rajinikanth pic.twitter.com/a5Ercu9pht
— சிங்கம் 🦁 (@Singamonfire) July 25, 2023
ஆனால் இவர்களுடைய எல்லாருடைய ஆட்டத்தையும் தூக்கி சாப்பிட்டு விடுவது போல் ஒருவர் ஆடியுள்ளார். அவர் காவாலா பாடலுக்கு தமன்னாவை போல் நடனமாடியுள்ளார். பார்ப்பதற்கு ஏதோ ஹாஸ்டல் போல் இருக்கிறது. அங்கு அந்த நபர் மேலே துணி உடுத்தாமல் தமன்னாவை போல் ஏதோ ஒரு துணியை கிராஸாக போட்டுள்ளார்.
அது போல் பேண்டை சைடில் கிழித்துவிட்டுள்ளார். பார்ப்பதற்கு தமன்னா அணிந்திருந்த ஆடை போல் இருக்கிறது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் இதை அனிருத்திற்கும், நெல்சன் திலிப்பிற்கும், தமன்னாவிற்கும் ரஜினிகாந்திற்கும் டிவிட்டரில் டேக் செய்யப்பட்டுள்ளது. இடுப்பை நன்றாக ஆட்டி கலக்கல் பெர்பாமன்ஸ் கொடுத்துள்ளார். இந்த பாடலை அவர் எந்த அளவுக்கு கிரகித்துக் கொண்டுள்ளார் என்பது இவரது துள்ளலான நடனத்தில் இருந்தே தெரிகிறது. படம் வெளியானால் முழு பாடலுக்கும் இவர் ஆடி பர்பார்ம் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர் யார் என நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications