Salt and Pepper லுக்கில்! ஜன நாயகன் ஆடியோ லாஞ்சுக்கு விஜய் அணிந்த டிரஸ்ஸை பார்த்தீர்களா? செம ஸ்டைல்!
கோலாலம்பூர்: "ஜன நாயகன்" படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக விஜய் அணிந்திருக்கும் உடையை பார்த்தீர்களா? சால்ட் பெப்பர் தாடியில் அழகான லுக்கில் இருக்கும் விஜய்யை பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
எச்.வினோத் இயக்கத்தில் "ஜன நாயகன்" எனும் திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ள விஜய்யின் கடைசி படம் ஜன நாயகன் ஆகும். இதனால் இந்த படம் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் நிறைய அரசியல் பேசப்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது.
ஆளும் கட்சியை விமர்சித்து சில காட்சிகள் இடம் பெறலாம் என்றும் படத்தின் மைய கருத்தே ஆளும் கட்சியை பற்றியதுதான் என்றும் கூறுகிறார்கள். படத்தின் கதை என்ன என்பது ஜனவரி 9ஆம் தேதிதான் தெரியவரும்.
இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் இன்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கீட் ஜலீல் மைதானத்தில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சி இரண்டாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. அதாவது இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு இசை கச்சேரி நடைபெற்று வருகிறது.
இதில் விஜய் நடித்த படங்களின் பாடல்களை பிரபல பாடகர்கள் பாடுகிறார்கள். இதற்காக எஸ்.பி.பி.சரண், விஜய் யேசுதாஸ், அனுராதா ஸ்ரீராம், ஸ்வேதா மோகன், கிரிஷ் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
இந்த இசை நிகழ்ச்சியை ரியோ ராஜும் அஞ்சனாவும் தொகுத்து வழங்குகிறார்கள். இதற்கு தளபதி திருவிழா என பெயரிடப்பட்டுள்ளது. அது போல் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு நடைபெறும் இசை வெளியீட்டு விழாவை ஆர்ஜே விஜய்யும் ரம்யா சுப்பிரமணியமும் தொகுத்து வழங்குகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்வேதா மோகன் மெர்சல் படத்தில் இடம் பெற்ற "மாச்சோ என்னாச்சோ
அவ டச்சிட்டா" என்ற பாடலை பாடுகிறார். அது போல் விஜய் யேசுதாஸ் நீ யாரோ என்ற பாடலை பாடுகிறார்.
இந்த இசை வெளியீட்டு விழாவுக்காக நடிகர் விஜய் மைதானத்திற்கு வந்துவிட்டார். அவர் நீல நிறத்தில் கோட் சூட் அணிந்திருந்தார். அவரை காண ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துவிட்டனர். சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications