மருத்துவ படிப்புகள்- ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு கோரும் ஹைகோர்ட் வழக்கு- ஜூலை 9-க்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரி திமுக, அதிமுக, மதிமுக, திராவிடர் கழகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 9 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, அதிமுக, மதிமுக, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி பெஞ்ச், மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

HC adjourns hearing on pettitions seeking 50% Reservation

ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தொரடப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27 % இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய பெஞ்ச் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், 27 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், இந்த வழக்குகளை ஒத்தி வைக்க என்று கேட்டுக்கொண்டார். அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், உச்சநீதின்ற வழக்கிற்கும், இந்த வழக்குக்கும் தொடர்பும் இல்லை; நீட் இல்லாதபோது தொடரப்பட்ட அந்த வழக்கிற்கும், இதற்கும் இதற்கும் தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஜூலை 9 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+