பா.ஜ.க. நடிகை குட்டி பத்மினி மீதான நில மோசடி புகார்-விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: பா.ஜ.க நிர்வாகி நடிகை குட்டி பத்மினி மீதான நில மோசடி புகாரின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மடிப்பாக்கத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புடைய 4800 சதுர அடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபு பாஷா என்பவரின் மனைவி இம்ரானா என்பவருக்கு விற்று விட்டதாக கூறி, நடிகையும், பா.ஜ. நிர்வாகியுமான குட்டி பத்மினிக்கு எதிராக, கடந்த 2011ம் ஆண்டு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

9 ஆண்டுகளாகியும் இந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், வழக்கை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றக் கோரி, ரமேஷ் சார்பில் அவரது பவர் ஏஜண்ட் சமத காமினி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ரவீந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாவதி பதிலளிக்க அவகாசம் கோரினார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் இறுதி வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பக்ரீத் பண்டிகை: பசு, கன்றுகள் வதைக்கு தடை.. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதாக தமிழக அரசு விளக்கம் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications