Next Lockdown?: சென்னை HCL ஊழியர்களுக்கு WFH அனுமதி – LPG தட்டுப்பாடால் கேன்டீன்கள் மூடல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் HCL நிறுவனத்தில் கேன்டீன்கள் முடங்கி போனதால், சென்னை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த மெயில் அனுப்பப்பட்டுள்ளது.

கேஸ் தட்டுப்பாட்டால் சென்னையில் உள்ள எச்சிஎல் நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் முக்கிய பணியில் இருப்போர் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

lpg shortage

எச்சிஎல் நிறுவனங்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் கேன்டீன்கள் மூடப்பட்டன. இதனால் ஊழியர்கள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர். மேலும் ஊழியர்களுக்கான அலுவலக பேருந்துக்கான பெட்ரோ, டீசல் தட்டுப்பாடு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால் வொர்க் பிரம் ஹோமை எச்சிஎல் அளித்துள்ளது.

கொரோனா லாக்டவுனின் போது முதல் முறையாக பல்வேறு ஐடி நிறுவனங்கள் வொர்க் பிரம் ஹோம் ஆப்ஷனை கொடுத்தனர். அப்போது கொடுத்தது அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்துதான் ஊழியர்கள் அலுவலகங்களுக்குச் சென்று வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது ஹோட்டல்கள், விடுதிகள், அலுவலக கேன்டீன்களில் பணியாற்றி வந்த வடமாநில,தென் மாநில, தமிழக தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இவை எல்லாமே கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா லாக்டவுனின் போது நாம் பார்த்த கொடூர காட்சிகள்தான், தற்போது மீண்டும் வந்துள்ளது.

ஈரான் போரால் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சென்னை, பெங்களூர், கொல்கத்தா, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. சில ஹோட்டல்களில் மெனுக்களை குறைத்துள்ளார்கள்.

வீட்டு உபயோக சிலிண்டரை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் வீட்டு உபயோக சிலிண்டருக்கும் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிலிண்டர் புக்கிங் செய்ய தொலைபேசி எண் வேலை செய்யாததால் மக்கள் கேஸ் ஏஜென்சிகளை முற்றுகையிட்டு வருகிறார்கள். மேலும் கேஸ் சிலிண்டருக்கு மாற்றான இன்டக்ஷன் ஸ்டவ்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அது போல் பெட்ரோல்- டீசலுக்கு தட்டுப்பாடு என வதந்தி பரவியதால் சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நேற்று இரவு முதலே கூட்டம் கூட்டமாக சென்று 20 லிட்டர் கேன்களிலும் வாட்டர் பாட்டில்களிலும் வாகனத்திலும் பெட்ரோலை நிரப்பி வருகிறார்கள்.

சென்னையில் தனியார் கல்லூரியான எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு வரும் 25 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் விடுதி மாணவர்களை காலி செய்ய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவமனைகளில் கூட அடுப்பெரிக்கும் வசதி இருக்கும் இடங்களில் சமையல் செய்து நோயாளிகளுக்கு கொடுத்து வருகிறார்கள். இந்த கேஸ் சிலிண்டர், பெட்ரோல் டீசல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பெரிய பிரச்சினையாக இது மாறுவதற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+