ஹெச்டிஎப்சி பேங்க் வாடிக்கையாளர்களா? PNB கார்டு இல்லாமல் பணம் எடுக்கறீங்களா? 1ம் தேதி முதல் ஆப்பு
சென்னை: இந்தியாவின் நிதித்துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் முன்னணி வங்கிகளான எச்டிஎப்சி (HDFC), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மற்றும் பந்தன் வங்கி (Bandhan Bank) ஆகியவை தங்களது ஏடிஎம் மற்றும் யூபிஐ (UPI) பரிவர்த்தனை விதிகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளன.. வரும் ஏப்ரல் 1 அமலுக்கு வரவுள்ள இந்த புதிய நிபந்தனைகள் பற்றி இங்கே சுருக்கமாக பார்க்க போகிறோம்.
தனியார் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகவும், 2025 நிலவரப்படி உலகின் 10-வது பெரிய வங்கியாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது எச்டிஎப்சி வங்கி... இது மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது..

எச்டிஎப்சி பேங்க்
இந்த வங்கி இதுவரை ஏடிஎம்களில் யூபிஐ (UPI QR Code) மூலம் பணம் எடுக்கும் வசதியை ஒரு கூடுதல் சேவையாகவே கருதி வந்தது.. ஆனால், இனிவரும் காலங்களில் நீங்கள் கார்டு இல்லாமல் யூபிஐ மூலம் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அது உங்கள் மாதந்திர 'இலவச ஏடிஎம் பரிவர்த்தனை' கணக்கிலேயே சேர்க்கப்படும்..
ஒருவேளை நீங்கள் அந்த இலவச வரம்பை தாண்டிவிட்டால், ஒவ்வொரு முறை யூபிஐ மூலம் பணம் எடுக்கும்போதும் ரூ.23 மற்றும் அதற்கான கூடுதல் வரிகளைக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.. டெக்னாலஜியை பயன்படுத்தி கார்டு இல்லாமல் எளிதாக பணம் எடுக்கிறோம் என்று நினைத்து அடிக்கடி யூபிஐ பயன்படுத்தினால், அது உங்கள் சேமிப்பில் கைவைத்துவிடும்.. எனவே அலர்ட்டாக இருகக வேண்டும்.
அடுத்ததாக, நாட்டின் 2வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, பாதுகாப்பு காரணங்களுக்காகத் தனது டெபிட் கார்டுகளுக்கான தினசரி பணப்பரிவர்த்தனை வரம்பைப் பாதியாகக் குறைத்துள்ளது..
பஞ்சாப் நேஷனல் வங்கி
ரூபே என்.சி.எம்.சி. பிளாட்டினம், ரூபே வுமன் பவர், மாஸ்டர்கார்டு பிளாட்டினம் மற்றும் விசா கோல்ட் உள்ளிட்ட குறிப்பிட்ட கார்டுகளை வைத்திருப்பவர்கள் இனிமேல் ஒரு நாளில் ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க முடியும்..
அதேபோல், ரூபே செலக்ட் மற்றும் விசா சிக்னேச்சர் போன்ற பிரீமியம் கார்டுகளுக்கான வரம்பு ரூ.75,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. இதுமட்டுமின்றி, கடந்த 3 ஆண்டுகளாக பரிவர்த்தனை செய்யப்படாத, பூஜ்ஜிய இருப்பு கொண்ட கணக்குகளை ஏப்ரல் 16 முதல் மூடவும் வங்கி முடிவெடுத்துள்ளது.. அத்தகைய வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 15-க்குள் தங்களது கிளைக்குச் சென்று கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காவிட்டால், கணக்குகள் எந்த அறிவிப்புமின்றி முடக்கப்படும்..
இதற்கு நடுவில், கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு, கிராமப்புற மக்களுக்கும் சேவை வழங்கி வரும் பந்தன் வங்கி, ஏடிஎம் கட்டணங்களில் சில கடுமையான மாற்றங்களை செய்துள்ளது..
ஏடிஎம் - பரிவர்த்தனைகள்
சொந்த வங்கி ஏடிஎம்களில் 5 முறை இலவச அனுமதி வழங்கப்பட்டாலும், மற்ற வங்கி ஏடிஎம்களைப் பயன்படுத்தும்போது மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்களுக்கு 3 முறையும், பிற ஊர்களில் உள்ளவர்களுக்கு 5 முறையும் மட்டுமே இலவசம்.. இந்த லிமிட்டை தாண்டினால் பணப் பரிவர்த்தனைக்கு ரூ.23-ம், பேலன்ஸ் செக் செய்வது போன்ற இதர பணிகளுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்படும்.
அதைவிட முக்கியமாக, உங்கள் கணக்கில் போதிய பணம் இல்லாத நிலையில் ஏடிஎம்மில் கார்டைச் செருகி பரிவர்த்தனை தோல்வியடைந்தால் அதற்கு ரூ.25 அபராதம் விதிக்கப்படும்...
மேற்கண்ட விதிமுறைகள் எல்லாம் வரும் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.. வங்கிகளின் இந்த புதிய மாற்றங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதாகத் தோன்றினாலும், சாதாரண நடுத்தர வர்க்கத்தினருக்கு இது ஒரு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள்.
வாடிக்கையாளர்கள் அதிருப்தி?
குறிப்பாக, அக்கவுண்ட்டில் பணம் இல்லாதபோது பரிவர்த்தனை தோல்வியடைவதற்கு அபராதம் விதிப்பது என்பது கஸ்டமர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் என்கிறார்கள்..
பாதுகாப்பிற்காக பண வரம்பை குறைப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அவசர தேவைக்கு அதிக பணம் தேவைப்படும்போது இது சிக்கலை ஏற்படுத்தலாம்.. எனவே, வங்கி வாடிக்கையாளர்கள் இனி மொபைல் ஆப் மூலமாக தங்கள் கணக்கு இருப்பை முன்கூட்டியே சரிபார்த்துவிட்டு ஏடிஎம் செல்வதே புத்திசாலித்தனம் என்றும் பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்...!!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications