சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு.. தலைமறைவாக இருந்த சித்தாண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை?

Google Oneindia Tamil News

சென்னை: குரூப் 4 முறைகேட்டில் தலைமறைவாக இருந்து சித்தாண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இடைத்தரகர்கள், அதிகாரிகள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

Head Constable Sithandi who has link in group 4 scandal admits in hospital?

இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக அரசு ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் தலைமைக் காவலராக பணிபுரியும் சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூரைச் சேர்ந்த சித்தாண்டி என்பவர் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சென்னையிலிருந்து சிவகங்கை சென்ற சிபிசிஐடி தனிப்படை போலீஸார் காரைக்குடி முத்துப்பட்டணம் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த உதவியாளர் வேல்முருகன் என்பவரை கைது செய்தனர்.

கருப்பு ஆடுகளை களையெடுப்போம்.. ஆனால் குரூப் 4 தேர்வை ரத்து செய்ய முடியாது.. ஜெயக்குமார் திட்டவட்டம் கருப்பு ஆடுகளை களையெடுப்போம்.. ஆனால் குரூப் 4 தேர்வை ரத்து செய்ய முடியாது.. ஜெயக்குமார் திட்டவட்டம்

தலைமைக் காவலர் சித்தாண்டியின் தம்பி என்பதும் குரூப் 2 தேர்வில் மாநில அளவில் 3-ஆவது இடம் பெற்று காரைக்குடி இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் 2018 நவம்பர் மாதம் இளநிலை உதவியாளராக சேர்ந்ததும் தெரியவந்தது. சித்தாண்டி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

English summary
Head Constable Sithandi who is hiding in Group 4 scandal is admitted in hospital?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X