வெறும் வயிற்றிலே இந்த "சூப்" குடித்தாலே போதுமா? தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயம்.. ஆச்சரிய நன்மைகள்
சென்னை: உடல் எடையை குறைக்க எத்தனையோ வழிவகைகள் உள்ளன.. ஆனால், ஆரோக்கியமான முறையில், நம்முடைய கிச்சனில் உள்ள பொருட்களை கொண்டே, உடல் எடையை குறைக்கலாம் என்கிறார்கள்.. அதில் ஒன்றுதான் வெங்காயம்.
சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டிலுமே நிறைய சத்துக்கள் உள்ளன.. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதிலுள்ள "அலைல் புரோப்பைல் டை சல்பைடு" என்ற எண்ணெய்தான்.. நம்முடைய கண்களில் கண்ணீர் வருவதற்கு காரணமும் இதுதான்.

உடல் எடை குறைய பச்சையாக சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்கும். சின்ன வெங்காயச்சாறு கொழுப்பை உடனே கரைக்கும். வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய்ப்புண் கண்வலி குணமாகும். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. நச்சுக்களை அழிக்க செய்கிறது.
சத்துக்கள்: ரத்தத்தின் சீரான தன்மையை சரியாக வைத்திருக்க வெங்காயம் உதவுகிறது. இதன் காரணமாக, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தும் குறைகிறது. உடல் எடையை குறைப்பதில் வெங்காயம் பெரிதும் துணைபுரிகிறது.. வெங்காயத்தில் புரோட்டீன், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளதால், உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது. கெட்ட கொழுப்பை வெங்காயம் குறைக்க உதவுகின்றன
வெங்காயத்தை காய்கறிகளில் சேர்க்க வதக்கினால், சத்துக்கள் அழிந்து விடும் என்பதால், வெங்காயத்தை தனியாகவே, தண்ணீரில் கொதிக்க வைத்து சூப் போல சாப்பிடலாம்.
பட்டை, கிராம்பு, சோம்பு மூன்றையும் மிக்சியில் பவுடர் போல அரைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, அரைத்து வைத்த பவுடர், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்..

வெங்காய சூப்: பிறகு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக வைத்து, ஆற விட்டு மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். இதனை வடிகட்டி, அந்த தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து, அதனுடன், சோள மாவு கரைத்து, மிளகு தூள், தேங்காய்ப்பால், கொத்தமல்லி சேர்த்து லேசாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும். தேவைப்பட்டால், இந்த வெங்காய சூப்பில் புரோட்டீனுக்காக பனீரையும்சேர்த்து கொள்ளலாம்.
அதேபோல, சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், ஊளைச்சதை குறையுமாம்.. குறிப்பாக, அடி வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் தேன் வெங்காயம் உதவியாக உள்ளது.. காரணம், சின்ன வெங்காயம், தேன், இந்த இரண்டிற்குமே நச்சுக்களை முறிக்கும் தன்மை உண்டு.
சின்ன வெங்காயம்: அதாவது, சின்ன வெங்காயங்களை தோல் உறித்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அவை மூழ்கும்வரை தேன் ஊற்றி 2 நாட்கள் அப்படியே வைத்துவிட்டால் போதும்.. 3வது நாள் பயன்படுத்த துவங்கினால், கெட்ட கொழுப்பு நீங்கும் என்கிறார்கள். அத்துடன், உடலின் மெட்டாபாலிசமும் அதிகரிக்க செய்து, செரிமான மண்டலத்தையும் ஆற்றல் மிக்கதாக மாற்றுகிறதாம்.
அதுவும், காலையில், வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் சாப்பிட்டால், உடலுக்கு நன்மை என்கிறார்கள். இது நச்சுக்களை எளிதாக வெளியேற்ற தூண்டுகிறது. இதனால் இரவில் நன்றாக தூக்கமும் வரும்.. நுரையீரலுக்கும் நன்மை தரும். மூச்சுப்பிரச்சனை, சளித்தொல்லைக்கும் தீர்வு கிடைக்கும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications