Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

122 பேர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுகாதாரத்துறைக்கு அபராதம்.. உயர்நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வு வழங்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 122 மனுதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை வழக்குச் செலவாக வழங்க சுகாதாரத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சுகாதார துறையில் பணியாற்றியவர்களுக்கு முன்தேதியிட்டு சுகாதார ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் 2011ம் ஆண்டு அரசுக்கு உத்தரவிட்டது.

 health inspectors promotion order: Tamil Nadu health department fined in contempt of court case

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, அரசுக்கு எதிராக கடந்த 2015ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை... சுகாதாரத்துறை செயலாளரும், பொது சுகாதாரத்துறை இயக்குனர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் இல்லை... போதுமான அவகாசம் வழங்கியும் உத்தரவை அமல்படுத்தவில்லை என மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், தகுதியான 132 பேரில் 10 பேருக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 122 பேருக்கு உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக எட்டு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், எட்டு வாரங்களில் இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மனுதாரர்களின் மன உளைச்சல், பாதிப்புகளை கருத்தில் கொண்டு 122 மனுதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் வீதம் 1 லட்சத்து 22ஆயிரம் ரூபாயை வழக்குச் செலவாக இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+