கேன்சர் டூ இதய பாதிப்பு.. நாம்மை காக்கும் மாம்பழங்கள்! கெமிக்கல் மாம்பழங்களை கண்டறிவது ரொம்ப ஈஸி
சென்னை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய பழங்களின் ஒன்றான மாம்பழங்களில் இருக்கும் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம்!
உலகில் மிகவும் புகழ்பெற்ற பழங்களில் ஒன்று மாம்பழம். இனிப்பான மாம்பழங்களுக்குப் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே அடிமையாகவே இருப்பார்கள்!
இப்போது சீசன் என்பதால் மாம்பழ விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. அப்படி மாம்பழத்தில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் குறித்துப் பார்க்கும் முன் மாம்பழம் குறித்து சில தகவல்கள் பார்க்கலாம்.

எங்கு வளரும்
மாம்பழம் என்பது வெப்பமண்டலத்தில் வளரக் கூடியது. இந்தியா ஒரு வெப்பமண்டல பகுதி என்பதால் இயல்பாகவே நாட்டில் பல பல்வேறு பகுதிகளில் மாம்பழங்கள் வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி தற்போது உலகம் முழுவதும் பல கண்டங்களில் மாம்பழங்கள் வளர்க்கப்படுகிறது.

மாம்பழம்
ஒவ்வொரு பழமும் 5 முதல் 15 செமீ நீளமும், 4 முதல் 10 செமீ அகலமும் கொண்டது. ஒரு பழத்தின் அடை 150 முதல் 750 கிராம் வரை இருக்கும். பொதுவாக ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை மாம்பழ சீசனாக அறியப்படுகிறது. அமிலத்தன்மை குறைவாக இருக்கும் மாம்பழத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

நன்மைகள்
மாம்பழமானது நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுகள் மற்றும் பாலிபினோலிக் ஃபிளாவனாய்டு ஆக்ஸிஜனேற்ற கலவைகளைக் கொண்டு உள்ளது.
மாம்பழம் பெருங்குடல், மார்பகம், லுகேமியா மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. சமீபத்திய ஆராய்ச்சிகளின்படி, மாம்பழத்தில் உள்ள பாலிபினோலிக் ஆக்ஸிஜனேற்ற கூறுகள் மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களுக்கு எதிராகப் பாதுகாப்பை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

வைட்டமின் ஏ
வைட்டமின் ஏ மற்றும் ஃபிளாவனாய்டுகளான கரோட்டின், கிரிப்டோக்சாந்தின் போன்றவை மாம்பழத்தில் அதிகமாக உள்ளன. 100 கிராம் பழத்தில் 1080 IU வைட்டமின் ஏ உள்ளது. இது நமது தினசரி தேவையில் 36%ஆகவும். இந்த ரசாயனங்கள் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. இவை கண்பார்வையை மேம்படுத்துவதில் முக்கியமானவை.
சளி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் ஏ தேவைப்படுகிறது. கரோட்டின் அதிகம் உள்ள இயற்கை பழங்கள் நுரையீரல் பாதிப்பில் இருந்து பாதுகாப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொட்டாசியம்
புதிய மாம்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. நூறு கிராம் மாம்பழத்தில் 168 மில்லிகிராம் பொட்டாசியம் மற்றும் 1 மில்லிகிராம் சோடியம் உள்ளது. பொட்டாசியம் என்பது செல்கள் மற்றும் உடல் திரவங்களில் காணப்படும். இது இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மாம்பழத் தோல்களில் கரோட்டினாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற நிறமி ஆக்ஸிஜனேற்றிகள் பைட்டோநியூட்ரியன்கள் அதிகம் உள்ளது.

பிரச்சினை
இப்படி மாம்பழங்களில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அதேநேரம் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல மாம்பழத்தை அதிகமாக உண்டாலும் பிரச்சினை தான். மாம்பழத்தை அதிகமாக உண்டால் அரிப்பை ஏற்படுத்தலாம். இது உடலில் இருக்கும் சர்க்கரையை அதிகப்படுத்தும் அபாயம் இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைத் தவிர்க்கலாம்! மேலும் அளவுக்கு அதிகமாக உண்டால் உடல் எடை கூடும் அபாயம் உள்ளது.

ரசாயனங்கள்
பெரும்பாலான நகரங்களில் இப்போது மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகிறது. அதிக இனிப்பான மாம்பழங்கள் பெரும்பாலும் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டு இருக்கலாம். மாம்பழங்கள் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய மாம்பழங்களை ஒரு வாளி தண்ணீரில் போடவும். அவை மூழ்கினால், அவை இயற்கையாகவே பழுக்க வைக்கப்பட்டது. அவை மிதந்தால், அவை செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications