பரவும் ஓமிக்ரான்.. தயார் நிலையில் மருத்துவ கட்டமைப்பு.. ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை: தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க உள்ளிட்ட பலநாடுகளை அச்சமடைய வைத்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்துள்ள நிலையில், ஆல்பா, டெல்டா வகை வைரஸ்கள் ஆட்டத்தை ஆரம்பித்தன. தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வ்கை உருமாற்றம் அடைந்த வைரஸ் உலக மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பரவிய ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலும் கால்பதித்தது. மகராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கான, உள்ளிட்ட மாநிலங்களில் பரவிய நிலையில், தற்போது தமிழகம் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 170 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள ஓமிக்ரான் எண்ணிக்கை இப்போது 170 ஆக உள்ளது, மாநில வாரியாக மகாராஷ்டிரா 54 பேருக்கும், டெல்லி 28 பேருக்கு, தெலுங்கானா 20 பேருக்கும், ராஜஸ்தானனில் 17 பேருக்கும் , கர்நாடகாவில் 18 பேருக்கும், கேரளாவில் 15 பேர், குஜராத் 11, உத்தரப் பிரதேசம் 2, மற்றும் ஆந்திரப் பிரதேசம், சண்டிகர், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒன்று. என பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திற்கு நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா புதிய வகையான ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஜீனோம் வரிசைப்படுத்துக பரிசோதனை மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் அதிகரிக்கும் நோய்களை கட்டுப்படுத்திட நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications