Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இத்துணூண்டு துண்டு... பட்டைய கிளப்பும் "பட்டை".. ஆண்களே லவங்கப்பட்டையை விட்றாதீங்க.. அட இலவங்கப்பட்டை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாதாரண மசாலா பொருள் என்று மட்டுமே நினைத்து கொண்டிருக்கும், இந்த லவங்க பட்டையில் ஒளிஞ்சிருக்கும் மருத்துவங்கள் என்னென்ன தெரியுமா?

சமையலுக்கு சுவை + நறுமணம் இரண்டையுமே தரக்கூடியது இந்த லவங்கப்பட்டை.. அளவுக்கு அதிகமான சத்துக்கள் நிறைந்த, இந்த பட்டை இல்லாமல், சைவ பிரியாணியும் கிடையாது, அசைவ பிரியாணியும் கிடையாது..

Health Useful Benefits Cinnamon Water Do you know that Cinnamon Power is beneficial for men

ஆயிரக்கணக்கில் கறி வாங்கி பிரியாணி சமைத்தாலும், இத்துனூண்டு பட்டைதான், பிரியாணியின் மணத்தையும், ருசியையும் தூக்கி நிறுத்துகிறது. சிலோன் லவங்கம் என்று சொல்லப்படும் இலங்கையில் விளையும் பட்டை, தனித்துவமான சுவை, மணம் கொண்டது.

இந்த பட்டையில் மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், மங்கனீசு, காப்பர், ஜிங்க், வைட்டமின்கள், நியாசின், தியமின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. பூண்டை காட்டிலும், இந்த பட்டை அதிக சக்தி வாய்ந்ததாக சொல்கிறார்கள்.. அதிக சக்தி வாய்ந்த பாலிஃபீனால் ஆக்ஸிஜனேற்றங்களை இந்த பட்டை கொண்டிருக்கிறது.

இன்சுலின்: ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவை குறைக்க இந்த பட்டை உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் இந்த பட்டை தண்ணீரை குடித்து வந்தால், சர்க்கரை அளவு கட்டுப்படும் என்பார்கள்.. பட்டையை தூள் செய்து கொண்டு, பால் அல்லது டீயுடன் சேர்த்து சாப்பிடலாம். உடல் எடையை குறைக்க நினைத்தால், இந்த பட்டை தண்ணீரை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.. பட்டை கணையத்தின் இன்சுலின் சுரப்பை எதிர்க்கும் பண்புகளை குறைத்து இன்சுலின் சுரப்பை ஊக்குவிப்பதாக, ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது பட்டை துண்டுகளை போட்டு நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி,தினமும் வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.. வேண்டுமானால் தேன் கலந்து கொள்ளலாம். இப்படி தினமும் குடித்தால், உடலிலுள்ள தேவையில்லாத கழிவுகள் வெளியேறி, உடல் சுத்தமாகும்.. உடல் எடையும் குறையும்.

நுரையீரல்: இந்த பட்டை தண்ணீரில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைய உள்ளன.. அதனால், அதனால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், இதயத்தையும் காக்கிறது.. நுரையீரலுக்கு பலத்தை தருகிறது.. இறுக்கமான அடர்த்தியான சளி நுரையீரலுக்குள் தங்கியிருந்தாலும் அதை, மொத்தமாக வெளியேற்ற பட்டை உதவுகிறது.. மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது. மூளை செல்களை சேதமடையாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.

பல்வலியால் மற்றும் பல் ஈறுகளால் அவதிப்படுவோர், இந்த பட்டை தண்ணீரை குடித்தால், வீக்கங்கள் குறைந்து நிவாரணம் கிடைக்கும்.. இதனால் வாய் துர்நாற்றமும் நீங்கும்..

நீர்க்கட்டிகள்: அதேபோல, பெண்களுக்கு கருவுற்ற காலத்தில் ஏற்படும் பிரச்சனை சரி செய்கிறறது.. இந்த நீரை குடித்து வரும்போது, கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படாமல் தடுக்கிறது. தினமும் பட்டை தண்ணீரை குடித்து வந்தால், புற்றுநோய் நம்மை அண்டாது..

முக்கியமாக, ஆண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் இந்த பட்டை.. ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு இருந்தால், இந்த பட்டை அவர்களுக்கு கை கொடுக்கும்.. இரவு தூங்கும்போது, பட்டையை பாலில் அல்லது தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து குடித்தால் பலன் கிடைக்கும்.

கவனம் : இந்த பட்டை உடலுக்கு நல்லது என்றாலும், சூட்டை அதிகம் கிளப்பிவிடக்கூடியது.. காரத்தன்மையும் கொண்டது.. அதனால், அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+