குண்டு குண்டா இருக்கீங்களா.. மளமளன்னு உடல் எடையை குறைக்கும் ட்ரிக்ஸ்.. இந்த எண்ணெய்யை விட்றாதீங்க
சென்னை: உடல் பருமன் பிரச்சனை உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.. அதேசமயம், உடல் பருமனுக்கும், நாம் சமையலில் பயன்படுத்தும் எண்ணெய்களுக்கும் மிக மிக நெருங்கிய தொடர்பு உள்ளது.
உடல் எடையை குறைக்க பல்வேறு விஷயங்கள் கையாளப்படுகிறது என்றாலும், உணவுப்பழக்கமே 90 சதவீதமாக காரணமாக அமைகிறது.. அந்த உணவுப்பழக்கத்தில், சில மாற்றங்களை கொண்டுவந்தாலே, உடல் எடை கட்டுக்குள் வரும். அதில் ஒன்றுதான் நாம் பயன்படுத்தும் எண்ணெய்.
கேரளாவில் தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் இந்த எண்ணெய்யை தமிழ்நாட்டில், தலைமுடி தவிர பெரிதாக எதற்கும் உபயோகிப்பதில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

தலைமுடி: உடல் எடை குறைய வேண்டுமானால், அதற்கு எந்த எண்ணெய் சிறந்தது என்று கேட்டால், நிபுணர்கள் பெரும்பாலும் சொல்வது தேங்காய் எண்ணெய்தான்.. தேங்காய் எண்ணெய் கல்லீரல் மற்றும் குடலுக்கும் நன்மை பயக்கும். மேலும், காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேங்காய் எண்ணெயையே சாப்பிடலாம்..
தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடித்தால், உடல் எடை குறையும் என்பார்கள். சூடான நீரில் அல்லது மூலிகை டீயில், ஒரு ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெயை சேர்த்து காலையில் குடித்தால் அவ்வளவும் நல்லது என்பார்கள்..
தேங்காய் எண்ணெய்: ஆனால், தேங்காய் எண்ணெய்யில் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் நிறைய உள்ளதால், இது சமையலுக்கு ஏற்றது மட்டுமல்ல சரியானதும்கூட என்கிறார்கள்.. இதிலுள்ள லாரிக் அமிலமானது, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது. இதனால், ஹார்ட் அட்டாக் உள்ளிட் இதயம் தொடர்பான நோய்கள் தடுக்கப்படுகினற்ன. அத்துடன் கொழுப்பையும் குறைத்துவிடுகிறது. இதிலுள்ள ட்ரைகிளிசிரைடுகள் விரைவாக உறிஞ்சப்படுவதால், கலோரி எரிப்பை அதிகப்படுத்துகிறது..
இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது.. தேங்காய் எண்ணெய்யில் கலோரிகளும் அதிகம் உண்டு என்பதால், குறைவாகவே பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் எடை அதிகமாகிவிடும்.
ஆலிவ் எண்ணெய்: அதேபோல ஆலிவ் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தலாம்.. ஆலிவ் பழங்களில் இருந்து எடுக்கப்படும் இயற்கை எண்ணெய் என்பதால், நிறைய சத்துக்கள் இதில் உள்ளன.. குறிப்பாக, ஒலிக் அமிலம், ஒமேகா-6 ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன.. இந்த ஒலிக் அமிலம்தான், புற்றுநோய் மரபணுக்களை எதிர்த்து போராடுகிறது.. கெட்ட கொழுப்புகளை எரித்துவிடுகின்றன.. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பெருமளவு உள்ளதுடன், வைட்டமின்கள் E, K போன்றவையும் உள்ளன.
ஆலிவ் எண்ணெய்யை சாப்பிடுபவர்களுக்கு பக்கவாத அபாயம் குறைவாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.. அதேபோல, இந்த எண்ணெய்யை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பிரச்சனை ஏற்படுவதில்லையாம். ரத்த நாளங்களை பாதுகாத்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதாலேயே இந்த ஆலிவ் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்த சொல்கிறார்கள்.
ஆளிவிதை: அதேபோல, ஆளி விதை மற்றும் சோயா எண்ணெய்களையும் தாராளமாக பயன்படுத்தலாம்.. ஆளி எண்ணெய்யில் நார்ச்சத்துக்களும், ஒமேகா-3 கொழுப்பு அமிலமும் அதிகம்.. சோயா எண்ணெய்யில், நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாகவே உள்ளதுடன், வைட்டமின்-K அதிகமாக உள்ளது..
இந்த நேரத்தில் கடலை எண்ணெய் பற்றியும் சொல்ல வேண்டியுள்ளது. முதுமையை காத்து, புற்றுநோயை தடுக்கும் சக்தி இந்த கடலை உள்ளது. அத்துடன் உடல் எடையையும் குறைக்கிறது. ஒரு ஸ்பூன் கடலை எண்ணெயில் 120 கலோரிகள் உள்ளன. அதனால், மிக குறைந்த அளவே இந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். அதேபோல, ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், இதை அதிகம் சாப்பிடக்கூடாது. காரணம், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படலாம்..
டாக்டர்கள் அட்வைஸ்: எனினும் எந்த எண்ணெய்யை பயன்படுத்தினாலும், ஒரே பிராண்டு எண்ணெய்யை தொடர்ச்சியாக பயன்படுத்தக்கூடாத. மாதமாதம் எண்ணெய்களை மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டும்.. அதேபோல, உணவுமுறையில் ஏதாவது மாற்றங்களை செய்ய வேண்டுமானால், நிச்சயம் டாக்டர்களின் ஆலோசனையில்லாமல், பரிந்துரையில்லாமல், அறிவுரையுமில்லாமல் செய்யக்கூடாது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications