இதுவும் சக்ஸஸ்.. யாரிந்த 5 வயது "பூந்தமல்லி தாத்தா".. ஜஸ்ட் 2 மணி நேரத்தில் சென்னை போலீஸாரின் சபாஷ்
சென்னை: 5 வயது சிறுவன் காணாமல் போய்விட்டான்.. "தாத்தா" என்ற வார்த்தையை தவிர, அவனுக்கு வேறு எதுவுமே சொல்ல தெரியவில்லை.. அப்பறம் என்னாச்சு தெரியுமா?
பூவிருந்தவல்லி அடுத்துள்ளது குமணன்சாவடி.. நேற்றுமுன்தினம், இந்த பஸ் ஸ்டாண்டு அருகே 5 வயது சிறுவன் ஒருவன் சைக்கிளிலேயே சுற்றித்திரிந்துள்ளான்.. தன்னுடைய வீடு எங்கே இருக்கிறது என்று தெரியாமல், நீண்ட நேரமாகவே பஸ் ஸ்டாண்டை சைக்கிளில் ரவுண்டடித்து கொண்டிருந்தான்.

பஸ் ஸ்டாண்டு வாசலில் இருந்த ஒரு ஆட்டோ டிரைவர் இதைப்பார்த்துவிட்டு, சிறுவனிடம் ஏன் இங்கேயே சுற்றி திரிகிறாய்? உன் வீடு எங்கே இருக்கிறது? என்று கேட்டிருக்கிறார்.
முகவரி: அதற்கு அந்த சிறுவன், "தாத்தா - தாத்தா" என்றான்.. எத்தனை முறை விசாரித்தாலும் தாத்தா என்ற ஒற்றை வார்த்தையை தவிர, வேறு எதுவுமே சொல்ல தெரியவில்லை.. வீட்டு அட்ரசும் சொல்லவில்லையாம்.. ஒருவேளை வீட்டுக்கு செல்ல பயந்துகொண்டு இங்கேயே சுற்றித்திரிவதாக நினைத்த அந்த ஆட்டோக்காரர், சிறுவனை சைக்கிளில் வீட்டுக்கு செல்லுமாறு சொல்லிவிட்டு, பின்னாடியே சிறிது தூரம் ஆட்டோவில் சென்றார்.
ஆனால், வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் சிறுவன் திணறியதை அப்போதுதான் கவனித்தார் ஆட்டோ டிரைவர்.. அதற்கு பிறகுதான், பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தந்தார்..
தாத்தா: போலீசாரும் விரைந்து வந்து, சிறுவனிடம் விசாரித்தனர்.. அப்போதும் "தாத்தா" என்று மட்டுமே சிறுவன் சொல்லி கொண்டிருந்தான். இதையடுத்து, அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் வாக்கி டாக்கி மூலம் தகவல் சொன்னார்கள். அப்போதும் சிறுவனின் அட்ரஸ் கிடைக்கவில்லை..
அந்த நேரத்தில்தான், தன்னுடைய மகனை காணோம் என்று ஒரு தம்பதியினர், போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தந்தார்கள்.. உடனே அவர்களை அழைத்து, சிறுவனின் விவரம் மற்றும் அடையாளங்களை போலீசார் சொன்னார்கள்.. அந்த தம்பதியும், அது தங்கள் மகன்தான் என்று உறுதிப்படுத்தினார்கள்.. பின்னர் அவர்களை ஸ்டேஷனுக்கு வரவழைத்து, கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு சிறுவனை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சபாஷ்: இவ்வளவும் வெறும் 2 மணி நேரத்தில் நடந்து முடிந்துள்ளது.. ஆட்டோ டிரைவரின் உதவியால், பெற்றோரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்ட இந்த சம்பவம் பூந்தமல்லி பகுதியில் நெகிழ்ச்சியை தந்து வருகிறது.. காவல்துறைக்கும் பெற்றோர் கண்ணீர்மல்க நன்றி சொல்லிவிட்டு போனார்கள்..!!
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications