Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை ரயில்வே ஸ்டேஷனில்.. அந்த பொண்ணு யாருங்க? அதுவும் நள்ளிரவு 2 மணிக்கு? இது போதுமே நமக்கு.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் அந்த இளம்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.. யார் அந்த பெண்? என்ன நடந்தது?

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை சென்னையிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது... திண்டுக்கல்லை அடுத்துள்ள அம்பாத்துரை ரயில்வே ஸ்டேஷனில், ஆண் ஒருவர் 3 மாத கைக்குழந்தையுடன் ஏறினார்... அந்த குழந்தையே ரயிலில் ஏறியதிலிருந்தே பசியால் அழுது கொண்டே இருந்தது.

Heart Touching incident in Madurai Railway Station and Do you know Who is this Young woman

குழந்தை: அந்த நபரால், தன் குழந்தையை சமாதானப்படுத்தவே முடியவில்லை.. குழந்தையின் கதறல் ரயிலில் உள்ள பயணிகளை கலங்கடித்தது.. அதேசமயம், அந்த நபரின் மீது, மற்ற பயணிகளுக்கு சந்தேகம் எழுந்தது. புது நபர் என்பதால், அந்த குழந்தை அழுகிறதா? எதனால், குழந்தை தன் அழுகையை நிறுத்தவில்லை என்று குழம்பினார்கள்.
சிறிது நேரத்தில், மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்ததுமே, அந்த நபர் குழந்தையுடன் இறங்கிவிட்டார். ஆனால், சந்தேகத்திலிருந்த பயணிகள் சிலர், அந்த நபருடனேயே ஸ்டேஷனில் இறங்கி, அவர் பின்னாடியே கண்காணித்தபடி சென்றார்கள்..

பச்சிளம் குழந்தையை எங்கிருந்தோ கடத்தி கொண்டுவந்துவிட்டார் என்று நினைத்து, அந்த நபரை தாக்க முயன்றனர்... பிறகு, போலீசில் அவரை கொண்டுபோய் ஒப்படைத்தனர். போலீசாரும் அந்த நபரிடம் விசாரணையை மேற்கொண்டனர்.

குழந்தை: அப்போதுதான், அந்த குழந்தை நிஜமாகவே இவருடைய குழந்தைதான் என்பது தெரியவந்தது. வீட்டில் மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு, குழந்தையை தூக்கிக்கொண்டு வந்துவிட்டாராம்..

இதனையடுத்து போலீசார் அவருடைய மனைவிக்கு தகவல் கொடுத்து, அவரை நேரில் வரவழைக்க ஏற்பாடு செய்தனர்.. இந்த பரபரப்புகள் நடந்து முடிவதற்குள் நள்ளிரவு 2 மணி ஆகிவிட்டது. அந்த குழந்தையோ அழுகையை நிறுத்தவே இல்லை... பச்சிளங்குழந்தை என்பதால், அழுது அழுது அதற்கு தொண்டையே வற்றி போய்விட்டது.. அங்கிருந்த பலரும், பால் புட்டியை எடுத்து, பால் புகட்ட முயன்றார்கள்..

ஆனால், குழந்தை புட்டி பாலை விரும்பவில்லை. இதனால் அங்கிருப்பவர்கள் 2 மணி ராத்திரிக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்தனர்.. பிறகு, வேறு வழியின்றி, ரயில்வே ஸ்டேஷனில் பச்சிளங்குழந்தைகளுடன் இருந்த தாய்மார்களிடம், குழந்தைக்கு தாய்ப்பால் புகட்ட முடியுமா? என்று கேட்டார்கள்.. ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர்..

ரயில்வே ஸ்டேஷன்: அந்த நேரம்பார்த்து, கோவை செல்வதற்காக, மதுரை ரெயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு பெண் கைக்குழந்தையுடன் வந்தார்.. அவரிடத்திலும் ஓடிச்சென்று உதவி கேட்டார்கள்.. அந்த பெண், குழந்தைக்கு பால் புகட்ட முன்வந்தார்.. இத்தனைக்கும், அவரது ரயில் கிளம்புவதற்கு வெறும் 15 நிமிடங்களே இருந்தது.. அந்த நிலையிலும்கூட, குழந்தைக்கு பால் புகட்டினார்.

பல நேரம் பசியால் அழுத குழந்தை, அழுகையை நிறுத்திவிட்டு, வயிறு நிரம்ப பால் குடித்தது.. மனிதநேயத்துடனும், கருணையுடனும் பால் புகட்ட வந்த, பெண்ணை பாராட்டினர்.. சிலர் ஓடிச்சென்று, அங்கிருந்த கேன்டீனில் அந்த பெண்ணுக்கு இனிப்புகள், தண்ணீர் பாட்டில்களை வாங்கி வந்து தந்தனர்..

பிறகு அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணை ரயில் ஏற்றி விட்டனர்.. இறுதியில் குழந்தையின் வயிறும் நிறைந்தது... அங்கிருந்தோரின் மனமும் நிறைந்தது.

பழமை: இந்த உலகில் மிக பழமையானதும், மிகப் புதுமையானதும் "தாய்மை" மட்டுமே.. வாழ்க்கையில் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும்சரி, இன்னல்கள் வந்தாலும்சரி, உலக உருண்டையில் கலந்துவிட்ட இந்த தாய்மையானது, அனைத்தையும் புரட்டி போட்டுவிட்டு மேலே சென்று கொண்டேயிருக்கும்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+