”உன் கூடவே பிறக்கனும்” தம்பி உயிரை விட்டதும் அக்காள் எடுத்த முடிவு.. சோகத்தில் தாம்பரம்
தாம்பரம்: சாவிலும் இணை பிரியாத தம்பதியினை பார்த்திருப்போம்.. ஆனால் தாம்பரத்தில் தம்பி உயிரிழந்த சோகத்தில் அக்காவும் உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உடல் நலக்குறைவால் இறந்த தம்பி உடலை பார்த்து கதறி அழுத அக்காளும், அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தது அங்கிருந்தவர்களை கண்ணீரில் ஆழ்த்தியது.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் வேளாங்கண்ணி தாமஸ் (வயது 77). இவரது தம்பி வின்சென்ட் ஆரோக்கியநாதன் (72). சிறு வயதில் இருந்தே அக்காள் தம்பி இருவரும் பாசத்தோடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

உடல்நலக்குறைவு
இந்நிலையில் வின்சென்டுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று முன் தினம் அவரது உடல் நிலை மோசமான நிலையில் உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல் கிழக்கு தாம்பரம் பாரதமாதா தெருவில் உள்ள உறவினர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தம்பி உடல் அருகே
தம்பி உயிரிழந்த செய்தி அறிந்து வேளாங்கண்ணி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். கதறி அழுதபடியே தம்பியின் உடலை பார்த்து அஞ்சலி செலுத்துவதற்காக கிழக்கு தாம்பரம் பாரதமாதா தெருவில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது தம்பியின் உடலைப் பார்த்து கதறி அழுதுகொண்டிருந்த அவர் திடீரென அப்படியே கீழே மயங்கி விழுந்தார். தம்பியின் உடலை பிடித்தவாறே அவர் சாய்ந்து விழுந்துள்ளார்.
தம்பி இறந்த துக்கத்தில்
இதனால் பயந்துபோன உறவினர்கள் வேளாங்கண்ணியை மீட்டும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். தம்பி இறந்த துக்கம் தாங்காமல், அக்காவும் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து இருவரது உடலும் அருகருகே பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தம்பி இறந்த துக்கத்தில் அக்காவும் உயிரை விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications