ஹய்யோ.. பட்டபகலில் வெட்டவெளியில்.. பட்டென "முத்தம்" தந்த வீரர்.. அதிர்ந்து போன மக்கள்.. வீடியோ வேற
ராஜநாகம் ஒன்றிக்கு இளைஞர் ஒருவர் முத்தம் தந்த வீடியோ ஷேர் ஆகி வருகிறது
சென்னை: பாம்புக்கு ஒருவர் முத்தம் தந்துள்ளார்.. அதற்கு பிறகு என்ன நடந்தது தெரியுமா? இந்த வீடியோதான் வைரலாகி கொண்டிருக்கிறது.
இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் என்றாலே அது உடனே ட்ரெண்டிங் ஆகிவிடும்.. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும்..

ராஜநாகம்
இதில் பாம்புகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களும் எந்நேரமும் வைரலாகி வருகிறது.. அதற்கு காரணம், பாம்பை கண்டு அனைவருக்கும் பீதி இருப்பதால், அந்த வீடியோ மேலும் கிலியை தந்துவிடுவதுதான்.. இப்படித்தான் கர்நாடக மாநிலம் பொம்மனகட்டே என்ற இடத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி பகுதி, குடியிருப்புக்குள் ஒரு நாகப்பாம்பு புகுந்துவிட்டது. உடனே அதை பிடிக்க வீரரை அழைத்துள்ளனர்..

நாகப்பாம்பு
பாம்புபிடி வீரரோ, நாகப்பாம்பை பத்திரமாக பிடித்துவிட்டார்.. ஆனால், அத்துடன் விடவில்லை.. அந்த நாகப்பாம்பின் பின்னால் இருந்து முத்தம் தந்துவிட்டார்.. அந்த பாம்பு என்ன கோவத்தில் இருந்தோ, டக்கென ஆக்ரோஷமாக திரும்பி வீரரின் உதட்டில் வேகமாக தீண்டிவிட்டது.. உதட்டில் இருந்து அந்த இளைஞருக்கு ரத்தம் கொட்டியது.. இதனால் பதற்றம் அடைந்து, பாம்பை விட்டுவிடுகிறார். இதற்கு பிறகு, அந்த இளைஞருக்கு சிகிச்சை தரப்பட்டு உயிரை காப்பாற்றி விட்டார்கள்..

ராஜநாகம்
இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை அப்போது ஏற்படுத்தியிருந்தது.. ஆனால், இதேபோன்ற முயற்சியில் இன்னொரு வீரர் இறங்கி உள்ளார். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி உள்ளது.. ஒரு ராஜநாகம் படமெடுத்து வளைந்து நெளிந்து கொண்டிருக்கிறது.. அந்த பாம்புக்கு பின்னால், மெல்ல அமைதியாக செல்கிறார் அந்த வீரர்.. பாம்பு நாக்கை துருத்தி கொண்டிருந்தது..

திடீர் முத்தம்
சத்தமில்லாமல் மெதுவாக பாம்பு அருகில் சென்ற அந்த வீரர், பாம்புக்கு பின்னால் அதன் தலைப்பகுதியில் முத்தமிடுகிறார்.. இவ்வளவுதான் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.. முத்தம் தந்தபிறகு, அந்த பாம்பு, தலையை திருப்பியதா? இந்த வீரரையும் கொத்தியதா? அந்த வீரர் என்னவானார் என்பது தெரியவில்லை.. ஆனால், இந்த வீடியோவை பார்ப்பதற்கே திக் திக்கென்று உள்ளது.. எப்படியும் நுரை தள்ளியிருக்கும்..!!!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications